வலிமை சிமெண்ட், அம்மா குடிநீர் போல கலைஞர் அரிசி… விவசாய பட்ஜெட்டில் காங்கிரஸ் கோரிக்கை

திமுக அரசின் 2வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயத்துக்கான தனி பட்ஜெட் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதன் படி, இந்த ஆண்டும் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயத்துக்கான பட்ஜெட் தயாரிப்பதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் திங்களிழமை (மார்ச் 14) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் … Read more

பிரபல இயக்குனர் கௌதமன் தூத்துக்குடியில் கைது.!

தமிழ் திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கௌதமனை தூத்துக்குடி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் குறிஞ்சாக்குளம் காந்தாரி அம்மன் கோயில் வழிபாட்டு உரிமை போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த நான்கு பேருக்கு நடுகல் வழிபாடு செய்யவும், காந்தாரி அம்மன் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கௌதமன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். இந்த … Read more

பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக சிறுமி வீடியோ வெளியிட்ட விவகாரம், வீடியோவைப் பகிர்ந்தால் நடவடிக்கை – போலீசார் எச்சரிக்கை

செங்கல்பட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோ தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த சிறுமி வெளியிட்டிருந்த வீடியோவில் தனது உறவினர் ஒருவர், தனக்கும் சகோதரிக்கும் பாலியல் தொல்லை அளிக்கிறார் என்றும் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், சிறுமி குறிப்பிட்ட தினேஷ் குகன், எல்லப்பன், கோபால கிருஷ்ணன் ஆகிய மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேநேரம் அதே பகுதியைச் சேர்ந்த … Read more

சென்னை அருகே குரோம்பேட்டையில் ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையம் திறப்பு: மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: சென்னை அருகே குரோம்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். சென்னை அருகே குரோம்பேட்டையில் புதிதாக ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடங்க விழா நேற்று நடைபெற்றது. இதில்முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புற்றுநோய் மையத்தைதிறந்துவைத்தார். தொடர்ந்து, அந்த மையத்தை முதல்வர் பார்வையிட்டார். டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா, புதியமருத்துவமனையில் உள்ள அதிநவீன … Read more

Rasi Palan 15th March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 15th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 15th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 15ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு.!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.  இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை … Read more

இன்று பகல் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணிக்கு சந்தித்து பேசுகிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அதுபோது முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் சந்திக்கின்றனர். வருகிற 18ந்தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Source link

இந்தியா ஸ்கில்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி ஊக்கத் தொகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய அளவில் அனைத்து மாநிலங்களுக்கான திறன் போட்டிகள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா ஸ்கில்ஸ் இறுதிப் போட்டிகள்கடந்த ஜன.6 முதல் 10-ம் தேதிவரை டெல்லியில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் சார்பில் துறைவாரியாக பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்ட 36 பேர், பல்வேறு … Read more