மார்ச் 14: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு: பெருங்களத்தூர் மேம்பாலம் தயாராவது எப்போது?

சென்னைக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முக்கிய இணைப்பு பாலமாக பெருங்களத்தூர் இருக்கிறது. இங்கு போக்குவரத்து நெரிசல் மிக முக்கியமான ஒரு பிரச்சனை. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை மேம்பாலம் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.தென் தமிழகத்தின் நுழைவாயிலான பெருங்களத்தூரில் உள்ள மேம்பாலத்தின் ஒரு புறம் மே மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு … Read more

டிகேஎம்9 ரக நெல் கொள்முதல் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு.!

டிகேஎம்9 ரக நெல்லை கொள்முதல் செய்யப்போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் முறைகளில் சில மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் டிகேஎம்9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வகை நெல்லினை அரவை செய்து அதன் மூலம் பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக … Read more

உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட யானை பறிமுதல்

ராமநாதபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட யானையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நள்ளிரவில் வனச்சரகர் ஜெபஸ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உள்ளே யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உரிய ஆவணங்களும் இல்லாததால் யானையை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாகனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது யானை … Read more

”தினமும் ரூ.200 கூலியுடன் மனநிறைவு” – விவசாயப் பணிகளில் ஈடுபடும் புதுச்சேரி சிறைவாசிகள்

புதுச்சேரி: காலாப்பட்டிலுள்ள மத்திய சிறை வளாகத்தில் இயற்கை விவசாயப் பணிகளை கைதிகள் மேற்கொள்வதற்கான தொடக்க நிகழ்வு இன்று (மார்ச் 14) மாலை நடந்தது. இதனால் தினமும் ரூ.200 கூலி கிடைப்பதுடன், மனநிறைவுடன் உறக்கம் வருவதாக உருக்கமாக தண்டனை கைதிகள் குறிப்பிட்டனர். புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என மொத்தம் 244 பேர் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிறைத் துறைத் தலைவர் ரவிதீப் சிங் சாகர் வழிகாட்டுதலில், … Read more

ஏர்போர்ட்டில் பறந்த பாரத் மாதாகி ஜே – ஜெய்பீம் கோஷம்! பாஜக – விசிக முழக்க மோதல்!

கோவை விமான நிலையத்தில், திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே தெலங்கானா ஆளுநர் தமிழிசையை வரவேற்க வந்திருந்த பாஜகவினர் பாரத் மாதாகி ஜே கோஷம் போட்டு இடையூறு செய்ய பதிலுக்கு விசிகவினர் ஜெய்பீம் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்றார். அதே போல, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை மற்றும் திருப்பூர் … Read more

கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, இளைஞர் தற்கொலை.. தஞ்சாவூரில் பரபரப்பு.!

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கட்டாநகரம் என்ற கிராமத்தில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். முருகேசனுக்கு விஜய் என்ற மகன் இருக்கிறார். இவர் காரைக்காலில் தனது தாய் வழி பாட்டி வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.  சில நாட்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இத்தகைய சூழலில், திடீரென்று நேற்று அதே பகுதியில் அமைந்திருக்கும் வாய்க்காலுக்கு அருகில் அமர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அப்போது அவர் ஒரு கடிதம் ஒன்றை எழுதி … Read more

கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் கந்து வட்டிக் கும்பலால் கொல்லப்பட்ட வழக்கு ; குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் கந்து வட்டிக் கும்பலால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சிவக்குமார் என்பவனிடம் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி இருந்தார். தவணைப் பணத்தை கொடுக்கச் சென்ற அந்தப் பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த சிவக்குமார், அதனை வீடியோவாக எடுத்து இணையத்திலும் வெளியிட்டான். அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலுச்சாமியின் உதவியுடன் இதுகுறித்து பெண்ணின் தாய் போலீசில் … Read more

மார்ச் 18-ல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்

சென்னை: திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இம்மாதம் 18-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இந்த மாதம் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

முருகனுக்கு பரோல் வழங்கிடக்கோரி அவரது மாமியார் மனு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை பரோலில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முருகனின் மாமியார் பத்மா தாக்கல் செய்திருக்கும் மனுவில், தனது மகள் நளினி பரோலில் இருப்பதால், மருமகன் முருகனுக்கும் விடுப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். நளினி தனது கணவருக்கு விடுப்பு வழங்கும்படி மனு அளித்தும் சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பத்மா குறிப்பிட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முருகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால், 30 … Read more