'சிவப்பு நிற அரிசியை மக்கள் வாங்க விரும்பவில்லை' – அரசு எடுத்த முக்கிய முடிவு

நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் டிகேஎம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்திலும், சற்று பருமனாகவும் இருப்பதால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசியை மக்கள் வாங்க விரும்புவதில்லை என அரசு தெரிவித்துள்ளது. அதனால், மக்கள் விரும்பாத அரிசியை பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதை … Read more

27 ஏக்கர்… ரூ5,000 கோடி முதலீடு… 70,000 பேருக்கு வேலை… அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்!

CM Stalin laying foundation stone to DLF DownTown IT Campus: சென்னை தரமணியில், ரூ 5000 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் மூலம் 70000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் அமையவுள்ள டி.எல்.எஃப் டௌண்டவுன் வளாகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  ரூ.5000 கோடி முதலீட்டில், 6.8 மில்லியன் சதுர அடியில், 27 ஏக்கர் நிலப்பரப்பில், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் … Read more

வேளாண் விளை நிலங்களுக்குள் சுற்றித் திரியும் யாணைகள்! வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க விவசாயிகள் கோரிக்கை.!

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜகடை பகுதி ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப்பகுதியாகும். இங்கு வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுகின்றன. இப்பகுதிகளில் கோடைகாலங்களில், காட்டு யாணைகள் உணவு தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம். மகாராஜகடை பகுதிகளுக்குள்  தற்போது கர்நாடக மற்றும் ஆந்திர வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய யானைக்கூட்டம் அதிகாலை நேரத்தில் வந்து விளைநிலங்களை நாசம் செய்து வருவதாகவும், பின்னர் … Read more

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சலூன் கடைக்காரர் கொடூரக் கொலை

கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சலூன் கடைக்காரர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். தெலுங்குபாளையம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த சசிக்குமார் என்பவர், வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவில் சசிக்குமார் வீட்டுக்குச் சென்ற இரண்டு பேர், அவரை வெளியே வருமாறு அழைத்து, சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக ராம்ஜி, இளங்கோ என இரண்டு பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராம்ஜியும் இளங்கோவும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் … Read more

தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது: பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்: ”திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மாநிலம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மாடகாசம்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்வதில்லை. ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் செல்லலாம். அவர்கள் கட்சிக்கு உண்மையானவர்கள் இல்லை. சட்டப்பேரவை … Read more

விருதுநகர்: சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல, வரும் மார்ச் 15 முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இக்கோயிலுக்குச் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், … Read more

விளையாட்டுத்துறையில் சாதிக்க விருப்பமா? தமிழக அரசின் அருமையான வாய்ப்பு

Tamilnadu Sports Hostel Admission details: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகளில் சேர்ந்து விளையாட்டுகளில் பயிற்சி பெற பள்ளி மாணவ, மாணவியர்களிடம் இருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆணையம் அறிவித்துள்ளது. விளையாட்டுத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள் சேர்க்கைப் பெற்று பயிற்சி பெறலாம். இந்த விளையாட்டு மையங்களில் சேர்க்கைககான அறிவிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், … Read more

குழந்தை இல்லாத மன உளைச்சலில் பெண் எடுத்த விபரீத முடிவு.. மதுரை அருகே நிகழ்ந்த சோகம்..!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகள் முத்துலட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் அவருக்கு குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை … Read more

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறுமியின் உறவினருக்கு மகிளா நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், அவருக்கு சிறுமியின் தாய்மாமனான முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் முருகேசன் போக்சோ சட்டத்தில் கைது … Read more

’இந்து தமிழ் திசை’ இணையதள செய்தி எதிரொலி: ஆதரவற்ற 3 சிறுவர்களுக்கு உதவிட தமிழக அரசு நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து, அடுத்த வேளை உணவுக்கே போராடிவரும் 3 சிறுவர்கள் குறித்து ’இந்து தமிழ் திசை’யின் இணைய தளத்தில் வெளியான செய்தி எதிரொலியாக, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் வசித்தவர் தையல் தொழிலாளி லோகநாதன். இவரது மனைவியின் பெயர் வேண்டா. இவர்களுக்கு கார்த்திகா(15), சிரஞ்சீவி(14), நிறைமதி(10) ஆகிய 2 மகள்கள் … Read more