கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம்… அமைச்சர் கே.என் நேரு – அடிகளார் சந்திப்பு சர்ச்சை

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேல்மருவத்தூர் பங்களாரு அடிகளாரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் திமுக ஆதரவாளர்கள் மத்தியிலேயே விமர்சிக்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியுள்ளது. கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம் என்று கே.என்.நேருவுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். கடவுள் மறுப்பை வலியுறுத்திய பெரியாரின் திராவிடர் கழகத்தின் இயக்கத்தின் நீட்சியான திமுகவில், முக்கியத் தலைவர்கள் அமைச்சர்கள் பலரும் தற்போது கோயில்களுக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடர்ந்து கோயில்களுக்கு சென்று வழிபட்டு … Read more

முதலமைச்சர் மு க ஸ்டாலின் சோகத்தில் ஆழ்த்திய மரணம்.!!

வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று, உடல்நலக்குறைவால் காலமான அவரது மனைவி மீனா சுவாமிநாதன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மீனா சுவாமிநாதன் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், வேளாண் ஆய்வறிஞர் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது வாழ்க்கைத் துணைவியார் திருமிகு. மீனா சுவாமிநாதன் அவர்களது மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன். சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவால் … Read more

அனுமதியின்றி நடத்தப்பட்ட வெடிமருந்து குடோனில் வெடிவிபத்து ; ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். க.மாமனந்தல் பகுதியில் ஹபிபுல்லா, இஸ்மாயில் ஆகியோர் உரிய அனுமதி பெறாமல் குடோன் வைத்து நாட்டு வெடிகளை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை அந்த குடோனில் நாட்டு வெடிகளை தயாரித்த போது ஏதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானது. அதில், ஏழுமலை 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே … Read more

'இட ஒதுக்கீடு வழங்கவே சாதி கேட்கப்படுகிறது; தவறான பிரச்சாரம் வேண்டாம்' – வீரமணி

சென்னை: பள்ளிகளில் இட ஒதுக்கீடுக்காகத்தான் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவுகள் விவரம் கேட்கப்படுகிறது, எனவே பள்ளிகளில் சாதிகள் பற்றிய விவரம் கேட்கப்படுவதாக தவறானப் பிரச்சாரம் வேண்டாம் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜாதி விவரக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து நேற்று (13.3.2022) வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு.நந்தகுமார் அவர்கள் நேற்றிரவு அளித்த ஒரு சுற்றறிக்கை … Read more

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணனின் இல்லத் திருமணவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் சீர்த்திருத்த திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், நூற்றுக்கு 99 சதவிகிதம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். எனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை மனதில் … Read more

YouTube Vanced: விளம்பரமே இல்லாமல் யூடியூப்… கூகுளின் எச்சரிக்கையால் சேவை நிறுத்தம்

பல ஆண்டுகளாக யூடியூப் பிரியர்களுக்கு விளம்பரமில்லா அனுபவத்தை வழங்கி வந்த Youtube Vanced செயலி, தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சட்ட ரீதியான காரணத்தை சுட்டிக்காட்டி, Youtube Vanced செயலியை உருவாக்கியவர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது. Youtube Vanced சேவையை நிறுத்திக்கொள்வதாக நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், நாங்கள் சேவையை நிறுத்திக் கொள்கிறோம். இனி வரும் நாள்களில் எங்கள் செயலியை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கிடைக்காது. நீங்கள் கேட்க விரும்பாத ஒரு … Read more

சென்னை துறைமுகத்தில் சற்றுமுன் வந்த வேலைவாய்ப்பு.!!

சென்னை துறைமுகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் துணை தலைமை பொறியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பொறியியல் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : சென்னை துறைமுகம் பணியின் பெயர் : துணை தலைமை பொறியாளர் கல்வித்தகுதி : பொறியியல் பட்டம் பணியிடம் : சென்னை தேர்வு முறை : எழுத்து தேர்வு … Read more

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தல் பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் – முதலமைச்சர் நியூட்ரினோ திட்டத்தை கைவிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் – முதலமைச்சர் Source link

மயிலாப்பூர் குளத்தில் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலையை தேடும் பணி தீவிரம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலையை கோயில் குளத்தில் தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடங்கினர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் , புன்னைவனநாதர் சன்னதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு பின், அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது. … Read more

அதிமுகவை அழித்து, ஒழித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்கிறது – ஜெயக்குமார்

“அதிமுகவை அழித்து, ஒழித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் வெளி வந்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி கண்டோன்மென்ட் (சட்டம் ஒழுங்கு) காவல் நிலையத்தில் ஆய்வாளர் சேரன் முன்னிலையில் இன்று கையெழுத்திட்டார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் திமுக அதிமுக இடையே 3 சதவீதம் மட்டுமே … Read more