ஓசூரில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற டீசல் திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவலர்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற  டீசல் திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.  ஓசூர் அருகே கர்நாடக எல்லையான ஜிகினி நகரத்தில் இரவு நேரத்தில் சரக்கு லாரிகளில் இருந்து அடிக்கடி டீசல் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை அடுத்து அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு கும்பல் டீசல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க முயன்ற … Read more

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு: தீபா, தீபக்கை சேர்க்க உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், தீபா, தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2008 – 2009 ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax)கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான … Read more

தமிழகத்தில் குறையும் நிலக்கரி கையிருப்பு: மாற்று வழிகளை யோசிக்கும் மின்வாரியம்

நிலக்கரியை கொண்டுவருவதற்கு கப்பல்களில் இடம் கிடைக்காததால் தமிழ்நாடு மின்சார வாரியம் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. ஒடிசாவின் பாரதிப் துறைமுகத்தில் கப்பல்களில் இடம் கிடைக்காத நிலை இருப்பதால் தமிழகத்திற்கு நிலக்கரியை கொண்டுவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது. இந்த அனல் மின்நிலையங்களில் வழக்கமாக 15 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருக்கும் நிலையில் தற்போது 5 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. … Read more

பிரியாணி அண்டாலாம் இருக்கு, பெருசா சம்பவம் பண்ணபோறீங்க போல… கமலின் விக்ரம் பட ட்ரெண்டிங் மீம்ஸ்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி திரைஅரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் திரில்லர் படமான இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத் ஜோஸ், மகேந்திரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் … Read more

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பிற்கு கமல்ஹாசன் வரவேற்பு.!!

ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்ததற்கு கமலஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம்.  சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,காவல்துறை,வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகமுதல்வர் விரைவில் … Read more

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், மேலும், இந்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. … Read more

'ரூ.5,000 கோடி முதலீடு, 70,000+ வேலைவாய்ப்பு' – சென்னையில் மிகப் பெரிய ஐடி வளாகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: சென்னை தரமணியில், “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பூங்காவானது 6.8 மில்லியன் … Read more

அம்மா உணவகங்களில் அகற்றப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்: ஆர்.பி. உதயகுமார் கண்டனம்

மதுரை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்து அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகைகளில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி முத்திரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனிடையே, எந்த மாற்றமும் இல்லாமல் அம்மா உணவகம் செயல்படும் என முதல்வர் அறிவித்த அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள … Read more

தமிழக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்துகிறது – பாலகுருசாமி

தமிழ்நாடு புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், மறைமுகமாக அவற்றில் உள்ள முக்கிய பரிந்துரைகளை இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் போன்ற திட்டங்கள் வாயிலாக அமல்படுத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். கல்வி பிரிவில் ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இத்தகைய யோசனைகள் ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கை 2020இல் ஏற்கனவே உள்ளது. இது நாட்டின் இளைஞர்களின் கல்வி சாதனைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார். இது தொடர்பாக அவர் … Read more

பட்ஜெட் தாக்கலின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும்! ஆசிரியர் சங்கம் கோரிக்கை.!

வரும் பட்ஜெட் தாக்கலின் போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு நல்லாட்சி நடத்தி இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்திவரும் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப்பாராட்டு கின்றோம். மேலும்,மார்ச் 18 ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் பின்வரும் கோரிக்கைகளுக்கான … Read more