புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பின் மழலையர் வகுப்புகள் திறப்பு: அரசுப் பள்ளியில் மகனைச் சேர்த்த கல்வித்துறை இயக்குநர்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் இன்று திறந்தன. இச்சூழலில் அரசுப் பள்ளியில் தனது மகனை புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் சேர்த்தார். புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று குறைந்துள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் முதல்முறையாக பள்ளிக்கு பெற்றோருடன் வந்தனர். அவர்களை ஆர்வமுடன் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து கரோனா நோய்த் தொற்றானது அதிகரித்ததால் படிப்படியாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. … Read more

பள்ளிகளில் குழந்தைகளின் சாதி குறித்த தகவல் சேகரிப்பா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறித்த விவரப் பதிவேட்டில் அவர்களது சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. அதில், பள்ளி மேம்பாட்டுக் குழுவுக்கான நிதி வழங்க ஏதுவாக 2020 – 21 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அனுப்பாத பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரா, பழங்குடி … Read more

உக்ரைன் போர்க்குற்றம்: ரஷ்ய அதிபர் புதினை விசாரணை செய்ய முடியுமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது வழக்குத் தொடர வேண்டும் என கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இம்மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டது மட்டுமின்றி இதற்கு முன்பு ஏற்படாத அளவில் அகதிகளாக மக்கள் தஞ்சமடைய வழிவகுத்தது. உக்ரைன் அதிபர் வோலோடோமிர் ஜெலென்ஸ்கி ஏபிசி செய்திக்கு அளித்த பேட்டியில், எங்கள் நிலத்திற்குள் அத்துமீறி … Read more

நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.!

சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இது குறித்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் … Read more

தாய்மாமன் உருவச் சிலை மீது அமர்ந்து குழந்தைகளுக்கு காது குத்து விழா… திண்டுக்கல்லில் நடந்த உருக்கமான நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காதுகுத்து விழா நடத்தப்பட்டது. வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி- பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீமற்றும் மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நேற்று நடைபெற்றது. பாண்டித்துரை இறந்ததால் அவருடைய சிலிக்கன் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது … Read more

தமிழக கல்வித் துறையில் புதிய திட்டங்கள்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி பாராட்டு

சென்னை: தமிழக கல்வித் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தி வருவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினரும், இபிஜி அறக்கட்டளைத் தலைவருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்மையில் கல்வித் துறையில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட பல திட்டங்களை கல்வியாளர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். குறிப்பாக, இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் ஆகியதிட்டங்கள் … Read more

தூத்துக்குடி டூ தேவகோட்டை: ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட யானை சிறைபிடிப்பு

தூத்துக்குடியிலிருந்து தேவகோட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட யானை சிறைபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியிலிருந்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி யானையை வாகனத்தில் கொண்டு செல்லப்படுவதாக ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகள் யானையை கொண்டு சென்ற வாகனத்தை பட்டணம்காத்தான் பகுதியில் வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது யானை கொண்டு செல்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து … Read more

மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள்.. புதிய சாதனை செய்த ரொனால்டோ.. மேலும் செய்திகள்

இந்தியா-இலங்கை மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் இரு அணிகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது இந்தியா. இதையடுத்து, விளையாடிய இலங்கை 109 ரன்களில் சுருண்டது. 143 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த ஆட்டத்தில் ரிஷப் … Read more

சென்னை ஆயுதத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு.!!

ஆயுதத் தொழிற்சாலையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வர்த்தக பயிற்சியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் பணியின் பெயர் : வர்த்தக பயிற்சியாளர் கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ பணியிடம் : சென்னை தேர்வு முறை : நேர்காணல் … Read more

ஆட்டோ சங்கர் வகையறா.. ஆம்பள ஆபாச வீடியோ.. ஆத்திரத்தில் இரு கொலைகள்.. ஆவடியில் கூலிப்படை அட்டகாசம்.!

சென்னை ஆவடி அருகே ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்யச் சென்ற கூலிப்படையினர் ஒரே நேரத்தில் இருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஓ.சி.எப் மைதானத்தில் இருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடந்தனர். இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்த போலீசார் , அவர்கள் இருவரும் ஆவடி வசந்தம் நகரை … Read more