அமெரிக்கை நாராயணன் மீது காங்கிரஸ் நடவடிக்கை: காரணம் இதுதான்!

இந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலி காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரக்காண்ட், மணிப்பூர், ஆகிய 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இருந்த ஆட்சியை ஆம் ஆத்மி கட்சியிடம் பறிகொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு காங்கிரஸ் கட்சி தலைமை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. … Read more

திடீர் பரபரப்பு.. திமுகவின் முக்கிய நிர்வாகி கத்தியால் குத்திக் கொலை.!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளஉடையானம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள். இவர் திமுக வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.  இவரது  மகள் சோலைமணிக்கும், மூர்த்தி என்பவருக்கும் ராக்கம்மாள் திருமணம் செய்து வைத்தார். திருமணம் நடைபெற்ற சில நாட்களிலே கருத்து வேறுபாடு காரணமாக சோலைமணியை மூர்த்தி பிரிந்து சென்றுவிட்டார்.  இதற்கு மாமியார் ராக்கம்மாள் தான் காரணம் என நினைத்த மூர்த்தி நேற்று காலை அவரது வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது மூர்த்தி … Read more

புதுச்சேரியில் பெட்ரோல் பங்கில் தமிழக இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து

புதுச்சேரி யூனியன் வில்லியனூரில் பெட்ரோல் போட வந்த தமிழக இளைஞரை கத்தியால் தாக்கிய கும்பலை சிசிடிவி உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி – விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தமிழகத்தை சார்ந்த பழனி என்பவர் பெட்ரோல் போட சென்ற போது கரிக்கலாம்பாக்கத்தைச்  சேர்ந்த 3பேருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 3பேரும்  பழனியை கத்தியால் தாக்கியும், வாகனத்தை சேதப்படுத்தி விட்டும் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி உதவியுடன்  ஒருவரை போலீசார்  … Read more

‘ஒரு வேளை உணவை 3 வேளை உண்டு உயிர் பிழைத்தோம்’ – உக்ரைனில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் உருக்கம்

சென்னை: உக்ரைனில் போர் தீவிரமடைந்தபோது ஒரு வேளை சாப்பிடும் அளவு உணவை 3 வேளைக்கு உண்டு உயிர் பிழைத்தோம் என்று அங்கிருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய போரால் உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் 1,921 பேர்சிக்கித் தவித்தனர். நீண்ட போராட்டங்களுக்கு பின்னர், அங்கு படித்து வந்த தமிழகமாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக மீட்கப்பட்ட 9 மாணவர்கள் நேற்று முன்தினம் சென்னை விமானநிலையம் வந்தனர். அவர்களில் ஒருவரான சுங்குவார்சத்திரம் மாணவி ஏ.மோனிஷா செய்தியாளர்களிடம் … Read more

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பழுதான 'லிப்ஃட்’ -2 மணி நேரமாக சிக்கித்தவித்த 13 பயணிகள்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி பழுதானதால் இரண்டு மணி நேரமாக பயணிகள் மின்தூக்கியினுள் சிக்கித் தவித்தனர். எப்போதும் பரபரப்பாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் பிரதான இடமாகவும் உள்ளது சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். இங்குள்ள மின்தூக்கியில் நேற்று மாலை குழந்தை உள்பட 13 பேர் சிக்கித்தவித்த நிகழ்வு பரபரப்பை உண்டாக்கியது. ஒன்றரை வயது குழந்தை, 5 பெண்கள் உள்பட 13 பேர் ரயில் நிலையத்திலுள்ள மின்தூக்கியில் சென்றப்போது நடுவில் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து மின்தூக்கியில் இருந்த உதவி … Read more

வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்.. வைகோ வலியுறுத்தல்.!!

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; … Read more

கல்லூரி இணையதளத்தில் தகவல் பதிவேற்றம் கட்டாயம்: ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

சென்னை: மாணவர் சேர்க்கை மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கல்லூரி இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஏஐசிடிஇ) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பு: கல்வி நிறுவனங்களின் செயல்பாடு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்பான விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் கோரப்படுகிறது. இதனால், ஏஐசிடிஇ பணிச்சுமை அதிகரிக்கிறது. முன்னதாக, கல்லூரிகளின் செயல்பாடு, மாணவர் … Read more

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. விடுதி காப்பாளர் போக்சோவில் கைது..!

மாணவர்களுக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் பத்தியாவரம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 2000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் அருகே இயங்கிவரும் விடுதியில் சுமார் 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் திருவண்ணாமலை சமூகநலத் துறை இணையதளம் மூலம் புகார் … Read more

சிறிய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்கப்படும்: மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: சிறிய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பாரா மெடிக்கல் லேப் கல்விமற்றும் நலச் சங்கத்தின் சார்பில்,தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் தலைமைவகித்தார். சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பரிசோதனைக் கூடங்களுக்கான தேசிய தர நிர்ணய அமைப்பின் தலைமை செயல் … Read more