உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் நாடு திரும்ப விருப்பம்

கோவை துடியலூர் அருகேஉள்ள, சுப்பிரமணியம்பாளையத் தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய் நிகேஷ் (21), சாய் ரோகித் ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் சாய் நிகேஷ், கடந்த2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். இச்சூழலில், உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையே, கடந்தமாதம் 24-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் … Read more

பழநி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்: மார்ச் 18-ம் தேதி தேரோட்டம்

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங் கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலின் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரத் திருவிழா. இத்திருவிழா திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று கொடியேற்றத் துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மண்ட பத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். கொடி மரத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிறக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் திருக்கல்யாணம் மார்ச் 17-ம் … Read more

பத்திரப் பதிவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசுக்கு நடப்பு ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய்: பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தகவல்

தமிழக பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அரசுக்கு ரூ.12,700கோடி நிதி வருவாய் கிடைத்துள்ளது என்று வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குநடப்பு ஆண்டில் அரசுக்கு ரூ.12,700கோடி நிதி வருவாய் கிடைத்துள்ளது. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் அனைத்தும் இணையவழி மூலமாக செலுத்தும் … Read more

நாய்க்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தி மும்பை மருத்துவர்கள் குழு சாதனை

இதய நோயால் பாதிக்கப்பட்ட நாய்க்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தி, மும்பையை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது. மும்பையை சேர்ந்த திவாரி என்பவரது ரோனி என்ற நாய்க்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 30 என்ற அளவில் இருந்துள்ளது. சராசரி அளவு 120 முதல் 150 ஆகும். ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட மினியேச்சர் பின்சர் வகையை சேர்ந்த அந்த நாயை மும்பையில் உள்ள பிரபல கால்நடை மருத்துவர் சங்கீதா வெங்சர்க்கார் … Read more

சென்னையில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 2 புதிய மெட்ரோ நிலையங்கள் எவை தெரியுமா?

திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் சென்னை மாநகரிலுள்ள மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் தடத்தின் நீட்டிப்புத் திட்டம், வண்ணாரப்பேடை முதல் விம்கோ நகர் வரை 19 கி.மீ பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் நீலம் மற்றும் பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றது. அதில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் – சுமுக தீர்வு காண திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தீவிரம்: கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒருசிலஇடங்களில் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு சுமுக தீர்வு காண தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பிறகு, கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை திமுக பிரித்து வழங்கியது. சில இடங்களில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. … Read more