சென்னையில் இன்று 2 புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு.. எங்கெங்கு தெரியுமா.?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விமான நகர் வரை பயணிகள் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களும் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு இயக்கப்படுகிறது. இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக காக்கும் – முதலமைச்சர்

உள்ளூர் தமிழராக இருந்தாலும், உக்ரைன் தமிழர்களாக இருந்தாலும் அனைத்து தமிழர்களையும் திமுக அரசு காப்பாற்றும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் இல்லத்திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் உக்ரைனில் இருந்த மாணவர்களை மீட்க முழு அமைக்கப்பட்டது எனவும், தமிழர்கள் எங்கிருந்தாலும் திமுக அவர்களை காப்பாற்றும் எனவும் கூறினார்.   Source link

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் 4 ஆயிரம் இடங்கள் உட்பட நாடுமுழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து வகையான பிரிவினருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் அனுப்பியுள்ள … Read more

அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைப்பா? – பதிலளித்த செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெரியகுளம் பண்ணை வீட்டில் அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவருடன் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஒ.பன்னீர் செல்வம்… நடந்து முடிந்த நகர்ப்புற … Read more

கொரோனா மாதிரி, பாஜக கூட வாழ பழகிக்க வேண்டிய காலம் வந்துடும் போல… இன்றைய அரசியல் மீம்ஸ்

Tamil Political memes in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்றைய இணைய பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய அரசியல் தொடர்பான மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம். … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்ட மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு.!

உக்ரைனில் இருந்த இந்தியர்களை மீட்க திறம்பட பாடுபட்ட மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் போர் நடைபெற்று வந்த நேரத்தில் அங்கிருந்த இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக பயனளித்தது. குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தது பாராட்டுக்குரியது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைன் … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா-தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கிக்கடன் மேளா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம், சிறு தொழில் மற்றும் பெட்டிக்கடை தொடங்குவதற்கான வங்கிக்கடன், மாற்றுத்திறனாளிகள் சொந்தத் தொழில் புரிவதை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்குத் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் தொடர்புகொண்டு வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவிட்டுள்ளது. Source link

ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட தவறாக முன்னிறுத்தப்படுகிறது: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை

கோவை: ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட சில நேரங்களில் தவறாக முன்னிறுத்தப்படுவதாக தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று (மார்ச் 13) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கரோனா இல்லாத நாடாக இன்று இந்தியா உள்ளது. சுமார் 180 கோடி தடுப்பூசி போட்டுள்ளதுதான் அதற்குக் காரணம். இது சாதாரண … Read more

தூத்துக்குடி: மாநில அளவிலான கபடி போட்டி: முதல் பரிசை தட்டித் தூக்கிய சென்னை அணி

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சென்னை அணி முதலிடம் பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் உள்ள பெத்தனாட்சி அம்மன் கோவில் மாசிப்பெருந் திருவிழாவை முன்னிட்டு, மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து சென்னை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 38 அணிகள் பங்கேற்றன, இதையடுத்து நாக் அவுட் முறையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கபடி … Read more

கலர்ஸ் தமிழ் சீரியலில் இணைந்த விஜய் டிவி நடிகை: வைரல் ப்ரோமோ

Rachitha Mahalakshmi joins Colors tamil TV serial: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் ரச்சிதா மஹாலக்ஷ்மி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கி, நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் இது சொல்ல மறந்த கதை. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் ரச்சிதா மஹாலக்‌ஷ்மி … Read more