63-வது பிறந்த நாள்… துர்காவுக்கு ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மு.க. ஸ்டாலின் தனது சகளை மகன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்ததோடு, திருமண விழா மேடையில், மனைவி துர்காவுக்கு அனைவர் முன்னிலையிலும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி தனது அன்பை வெளிப்படுத்தி சர்ப்ரைஸ் கொடுத்தார். திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பேசியதாவது: முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். … Read more

தென்காசி அருகே மாணவி தற்கொலை… பேராசிரியர்கள் கைது..!

மாணவி தற்கொலை செய்துகொண்டு விவகாரத்தில் பேராசிரியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் என்று பிரியா இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அப்போது , செல்போன் கொண்டு வர வேண்டாம் என  BCom துறை மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  இதனால் என்று பிரியா மற்றொரு துறையில் படித்து வரும் தோழியிடம் இருந்து செல்போன் வாங்கி படம் எடுப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பேராசிரியர் ஒருவர் அவரை மன்னிப்பு … Read more

மது அருந்திவிட்டு டாடா ஏஸ் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞருக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

சேலத்தில் மது குடித்துவிட்டு டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் நபருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த நிலையில், ஆத்திரத்தில் அந்த நபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் நேற்றிரவு டீசல் நிரப்புவதற்காக தனது டாடா ஏஸ் வாகனத்தை பெட்ரோல் பங்க்குக்கு எடுத்துச் சென்றுள்ளார். ரவுண்டானா அருகே நின்றிருந்த போக்குவரத்து போலீசார், வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது சந்தோஷ்குமார் மது அருந்தி இருந்தது தெரியவந்ததாகக் … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதியதாக வருவாய் கோட்டம், வட்டங்கள்: அமைச்சர்கள், எம்எல்ஏகள் முதல்வரிடம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய கோட்டம், வட்டங்கள் உருவாக்குமாறு அமைச்சர்கள், எம்எல்ஏகள் முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் மாநாடு நடைபெற்றது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமயம் வட்டத்தில் உள்ள அரிமளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் மற்றும் பொன்னமராவதி வட்டத்தை இலுப்பூர் கோட்டாட்சியரிடம் இருந்து புதுக்கோட்டைக்கு மாற்ற வேண்டும் … Read more

இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லி செல்லவிருப்பது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திமுகவிற்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் 2ஆம் தேதி டெல்லி செல்கிறார். 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் … Read more

புதிதாக திறக்கப்பட்ட துபாய் மியூசியத்தில் என்ன இருக்கிறது? அது நிஜமாகவே மியூசியம் தானா?

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் புதிதாக திறக்கப்பட்ட எதிர்கால மியூசியத்தில் கூட்டம் அலை மோதுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம், கடந்த மாதம் 23-ஆம் தேதி இந்த மியூசியத்தை திறந்து வைத்தார். இந்த மியூசியத்துக்கு செல்பவர்கள் 2071ஆம் ஆண்டுக்கு பயணிப்பது போன்ற அனுபவத்தை பெறுகின்றனர். ஐக்கிய அரபு அமீரகம் 1971ஆம் ஆண்டு உருவானது. அதன் நூற்றாண்டு விழா 2071 இல் … Read more

எள் பயிரிடுங்கள்.. விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள்..!

எள் பயிரிட்டு லாபம் பெறுங்கள் என தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நெல் அறுவடைக்கு பின்னர் மாசி பட்டத்தில் ‘எள்’ பயிரிட்டு லாபம் பெறலாம் என  விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, வேளாண் துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பயிரிடப்படும் எண்ணெய் வித்துக்களில், எள் பயிர் இரண்டாவது முக்கியப் பயிராக உள்ளது. நெல் பயிரை முப்போகம் சாகுபடி செய்வதால், மண் வளம் பாதிக்கப்படுவதோடு, தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. நெல் அறுவடைக்குப் … Read more

பேராசிரியர்கள் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..! கடிதத்தால் சிக்கிய பேராசிரியர்கள்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கல்லூரி பேராசிரியர்கள் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில், பேராசிரியர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கணேசன் – மாடத்தி தம்பதியின் மூத்த மகள் இந்து பிரியா, புளியங்குடி மனோ கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கல்லூரிக்கு செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தடையை மீறி சில மாணவிகள் செல்போனை கொண்டு சென்றுள்ளனர். அதனை இந்து … Read more

நீதிமன்றங்களை அதிகம் திறப்பது பெருமை இல்லை: உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் 

கொடைக்கானல்: நீதிமன்றங்களை அதிகம் திறப்பது பெருமை இல்லை. குற்றங்களை குறைத்து நீதிமன்றங்களை இழுத்துமூடுவது தான் பெருமை. ஏனென்றால் நீதிமன்றங்கள் குறைவதால் ஊரில் சண்டையும் இல்லை, குற்றங்களும் இல்லை என்று பொருள், என உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் பேசினார். கொடைக்கானலில் நீதித்துறை நடுவர் கூடுதல் நீதிமன்றம்-2 (ஜேஎம் 2) திறப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் நீதிமன்றத்தை திறந்துவைத்து பேசியது: “நீதியை விரைவில் கொடுக்கவேண்டும் என்ற காலகட்டம் தற்போது உள்ளது. தேவையில்லாமல் வாய்தா வாங்கக்கூடாது. … Read more

'ஹாலிடே ஜாலிடே' ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிறு வார விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் சுற்றலா தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி வெப்பம் வீசுவதால், இன்று ஞாயிறு விடுமுறையை … Read more