நெகிழி இல்லா தமிழகம் – விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர்

நெகிழி பயன்பாட்டை குறைத்து மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கி வந்த பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மஞ்சள் பைகளை வழங்கினர். நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையிலும் பொதுமக்களை மஞ்சள் பைகளை பயன்படுத்த வைக்கும் வகையில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு கடந்த 2021 டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் மீண்டும் மஞ்சள் பை என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் … Read more

தேர்தல் தோல்வி, உட்கட்சி குழப்பத்திற்கு இடையே காங்கிரஸ் செயற்குழு கூட்டம்; தலைமை மாற்றம் இருக்குமா?

Manoj C G  On CWC agenda today: Electoral defeat — and disquiet within: ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக வெளியான தகவலை காங்கிரஸ் மறுத்துள்ளது. தேர்தல் தோல்வியை நோக்கமாகக் கொண்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாக, சோனியா, அவரது மகன் … Read more

ஆத்திச்சூடிக்கு உரை எழுதிய கவிஞர் யார் இவர்..இன்று இவரின் நினைவு தினம்.!

சிறந்த தமிழறிஞர், புலவர், தமிழ் பேராசிரியரான கா.நமச்சிவாயம் 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்தார்.  இவர் சிறுவயதிலேயே நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி ஆகிய நூல்களை கற்றுத் தேர்ந்தார். பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவர், வகுப்பில் முழு நேரமும் பாடம் நடத்த மாட்டார். உலக விவகாரங்களை அலசுவதற்காக கடைசி பத்து, பதினைந்து நிமிடங்கள் ஒதுக்குவது இவரது வழக்கம். 1905ஆம் ஆண்டு வரை மாணவர்கள் ஆங்கில அறிஞர்கள் எழுதிய … Read more

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கியுள்ளது. அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு 4 மாதங்களில் சிபிசிஐடிக்கும் பிறகு 2017ஆம் ஆண்டு சிபிஐக்கும் மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை … Read more

உற்பத்தி அதிகரிப்பால் நெல்லை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தஞ்சாவூர்: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு நெல் உற்பத்தி அதிகம். உற்பத்தி அதிகரிப்பால், நெல்லை பாதுகாப்பதில் மிகப் பெரிய சவால் உள்ளது. எனவே நெல்லுக்கு மாற்றாக மாற்றுப் பயிர் சாகுபடியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் இருப்பதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2022 – 2023-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளுடனான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக்கேட்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் … Read more

'தமிழர்கள் எங்கிருந்தாலும் திமுக காப்பாற்றும்' – மு.க.ஸ்டாலின்

தமிழ் என்று சொன்னாலே உத்வேகம் பிறக்கிறது என்றும் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை திமுக காப்பாற்றும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தங்கை மகனின் திருமணம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் என்று சொன்னாலே உத்வேகம் பிறக்கிறது எனக் கூறினார். மேலும், உள்ளூர் தமிழனாக இருந்தாலும் … Read more

சென்னை மேயர் மத விவகாரம்: பிறப்பு சான்றிதழை செக் செய்ய சொன்ன அமைச்சர்

சென்னை பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற 24வது மெகா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 83.8 சதவீதம், 15 – 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியுள்ள 8.55 லட்சம் பேரில் 6.81 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக … Read more

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பகுதி சபை, வார்டு சபைகளுக்கு நிதி அதிகாரம் வேண்டும் –  மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பகுதி சபை, வார்டு சபைகளுக்கு  நிதி அதிகாரம் வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பகுதி சபை, வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.  உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையிலும் https://bit.ly/UrbanPMK, அதன்பின்  16.2.2022 முகநூல் பதிவிலும் பா.ம.க. வலியுறுத்தியிருந்தது நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி! தமிழ்நாட்டின் நகரங்களில் ஏரியா சபைகள் & வார்டு குழுக்களை அமைக்கும் சட்டம் … Read more

9ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை-கதறி துடிக்கும் தாய்

நாமக்கலில் 9ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழில் செய்து வரும் சங்கர் – சந்தனமாரி தம்பதியின் இரண்டாவது மகளான அர்ச்சனா, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்த மாணவி, பிற்பகலில் திடீரென வாந்தி வருவதாக கூறிவிட்டு, வகுப்பறையை விட்டு வெளியேறியிருக்கிறார். வகுப்பறையை விட்டு … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் முதல்வர் தனிகவனம் செலுத்தி ஆய்வு செய்து வருகிறார்: சேகர் பாபு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தனிகவனம் செலுத்தி, அதுதொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வருகிறார். எனவே விரைவில் ஒரு நல்ல முடிவெடுத்து, சட்டத்தின்படி அங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “சிதம்பரம் நடராஜர் கோயிலின் உண்மை நிலையை கண்டறிவதற்கு இணை ஆணையாளர் ஒருவரை நியமித்துள்ளோம். அவரது அறிக்கை வரப்பெற்றவுடன், சட்ட வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பிரச்சினையப் … Read more