பிரதமர் பாராட்டிய இந்தி படம்.. அக்ஷய் குமார் கதையை இயக்க விரும்பும் நடிகை.. மேலும் செய்திகள்

காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள த காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை எடுத்த குழுவினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் விகேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார். இவரது மனைவியும் நடிகையுமான பல்லவி ஜோஷி, அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர், நடிகை பல்லவி ஜோஷி, தயாரிப்பாளர் அபிஷேக் ஆகியோர் பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது அக்குழுவை பிரதமர் மோடி பாராட்டினார். கடந்த 1990இல் காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.இந்தக் … Read more

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்.!

உக்ரைன்- ரஷ்ய போர் காரணமாக, உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் நம் மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து ஓபிஎஸ் எழுதிய கடிதத்தில், இந்தியர்களை மட்டுமல்லாமல் வங்கதேசம்,  பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மத்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது. இதற்காக அதிமுக சார்பிலும், தமிழ்நாட்டு … Read more

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம்

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், 13,14,15ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக இயல்பை விட 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பூமத்திய … Read more

நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒடிஷாவிலிருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் அனல் மின்நிலையங்களில் மின்னுற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், 4320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக … Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. FD வட்டி அதிகரிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியா ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பல்வேறு டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையின்படி, 2 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட்களின் வட்டி விகிதம் 20 முதல் 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு மார்ச் 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. 211 நாள் முதல் 365 நாட்களில் முதிர்வடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி 3.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக, இந்த திட்டத்தில் 3.10 சதவீதம் வட்டி … Read more

திமுகவினருக்கு முக்கிய அறிவிப்பு : டெல்லி செல்லும் ஸ்டாலின்.! சோனியா, ராகுல், மம்தாவுக்கு அழைப்பு.!

திமுகவின் அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஒன்று தலைநகர் டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி அன்று டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். இந்த திமுக அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி, மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திமுக … Read more

கொடைக்கானல் கொழுமம் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தோகைவரை வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், நேற்றிரவு முதல் புதிதாக கொழுமம் வனப்பகுதியிலும் காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. நூற்றுக்கணக்காணக்கான ஏக்கர் பரப்பளவில் கட்டுக்கடங்காமல் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், வனப்பகுதி செங்குத்தாக இருப்பதால் தீயை அணைக்க முடியாத சூழல் நிலவுகிறது. காட்டு தீயால் கொழுமம் வனப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனிடையே அட்டுவம்பட்டி, கோம்பை உள்ளிட்ட தனியார் தோட்டப்பகுதிகளிலும் காட்டு தீ பரவியுள்ள … Read more

தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் இயக்கம் திமுக: மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று (13-03-2022) நடைபெற்ற நாதஸ்வரக் கலைஞர் டி.என். ராஜரத்தினத்தின் கொள்ளுப் பெயரனின் திருமண நிகழ்ச்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர், நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் சாதனைகள் மற்றும் பெருமைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் … Read more

'பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்குக' – வைகோ

”பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கின்றது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார் வைகோ. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  ”தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. கூட்டு ஆட்சி … Read more