தவறி விழுந்த செல்போன்.. எடுக்க சென்ற கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்..!

ரயிலுக்கு அடியில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற இளைஞர் ரயில் மோதி பலியான சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புலவனூரை சேர்ந்த பாரதிராஜா. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத்தில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். விழுப்புரம் ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பரங்கிபேட்டை ரயில் நிலையத்தில் அவரது செல்போன் தவறி விழுந்தது. அதனை எடுக்க ரயிலுக்கு அடியில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் புறப்பட்டதில் அவர் ரயில் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானர். தகவலறிந்து … Read more

கடலூரில் ரயிலுக்கு அடியில் விழுந்த செல்போனை எடுக்கச் சென்ற கல்லூரி மாணவர் மீது ரயில் ஏறி சம்பவ இடத்திலே பலி.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ரயிலுக்கு அடியில் விழுந்த செல்போனை எடுக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் மீது ரயில் ஏறி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். புலவனூரைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது. அதனை எடுக்க நின்று கொண்டிருந்த ரயிலுக்கு அடியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக … Read more

துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசி ஆளுநர்; பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கவும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: கோவை மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசிய தமிழக ஆளுநர் ரவியை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. கூட்டு ஆட்சி பற்றிப் … Read more

தென்காசி: மாணவி தற்கொலை விவகாரம் – பேராசிரியர்கள் இருவர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இந்து பிரியா, அங்குள்ள மனோ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். செய்யாத தவறுக்காக மன்னிப்புக் கடிதம் தர வேண்டுமென பேராசிரியர்கள் அவரை நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த இந்து பிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, மாணவர்கள், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

உக்ரைன் போர்: போலந்தில் 2 விமான எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா… என்ன காரணம்?

போலந்திற்கு 4700 அமெரிக்க துருப்புகளும், இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணையும் அமெரிக்கா சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். உக்ரைன் – ரஷ்ய போரில், நேட்டோ உறுப்பினரான போலந்து, முக்கிய பகுதியாக மாறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்க உட்பட பல நாடுகள் ராணுவ உதவி வழங்கிட போலந்து முக்கிய தளமாக விளங்குகிறது. ஏரளாமான உக்ரைன் மக்களும் அகதிகளாக போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அமெரிக்கா திடீரென துருப்புகளை போலந்திற்கு அனுப்பியதால், அங்கு போர் … Read more

கள்ள ஓட்டு போட்ட திமுக கவுன்சிலர்.? தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி.!

நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக கவுன்சிலர் ஒருவர் இரு வாக்கு சாவடிகளில் இரு வாக்கினைப் பதிவு செய்த வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாநகராட்சியின் 56-வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட மஞ்சுளாதேவி என்பவர், இரண்டு இடங்களில் வாக்குப் பதிவு செய்ததாக புகார் எழுந்தது. 646வது வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்திய மஞ்சுளாதேவி, அதற்கு அடுத்த வாக்குச்சாவடியான 647வது வாக்குச்சாவடியுலும் … Read more

“சுப்பிரமணியபுரம்” பாணியில் ஒரு கொலை.. “பதின் பருவ” காதலால் அரங்கேறிய பயங்கரம்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கொலை செய்யப்பட்டு, இருசக்கர வாகனத்துடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தனது 16 வயது மகளின் காதலை அவர் கண்டித்ததற்காக மகளின் காதலன் கூட்டாளியுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் நத்தப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஸ்டூடியோ கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை காலை நத்தப்பட்டி தென்னமரத் தோட்டம் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் எரிந்து கருகிய … Read more

சமூக வலைதளங்கள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி சாதி, மத மோதல்களை உருவாக்குவோர் மீது உடனடி நடவடிக்கை அவசியம்: மாவட்ட ஆட்சியர், காவல் துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சாதி, மத வக்கிரம் பிடித்தவர்கள் சமூகவலைதளம் போன்ற நவீன தொழில்நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தி, சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கின்றனர். இவர்களை முளையிலேயே களையெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பதிவுகளை பதிவிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது.முதல்வர் ஸ்டாலின் தனது நிறைவுரையில் கூறியதாவது: நாம் அனைவரும் சேர்ந்ததுதான் … Read more

சென்னையில் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று திறப்பு

திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இந்த இரண்டு மெட்ரோ ரயில் … Read more