துறையூரில் பள்ளி ஆசிரியையுடன் 11ம் வகுப்பு மாணவர் மாயம்.. சமூக வலைதளங்களால் பரபரப்பு‌.!

திருச்சி துறையூரைச் சேர்ந்த 17 வயது மாணவர் அங்கு உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் பெற்றோர்களிடம் தான் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் விளையாட சென்ற மாணவர் திரும்ப வீட்டிற்கு வரவே இல்லை. விளையாட சென்ற மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் நண்பர்களின் வீடுகளில் மாணவரை … Read more

ஒரு அடி நிலத்துக்காக பலத்த அடிபட்ட குடும்பம்.. கல் எறிந்ததால் ஓட்டம்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு அடி நிலத்துக்காக இரு குடும்பத்தினர் கம்பு கற்களோடு மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது… தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் ஆர்.சி.கோவில் தெருவைச் சேர்ந்த விண்ணரசி சுமதி என்பவரின் குடும்பத்துக்கும் ஜேம்ஸ் என்பவரின் குடும்பத்துக்கும் அருகில் உள்ள இடம் தொடர்பாக எல்லை பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை, இந்த பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் தனது உறவினர்களுடன் சேர்ந்து வாக்கு … Read more

1.33 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: தமிழக சுகாதாரத் துறை செயலர் தகவல்

தமிழகத்தில் 1.33 கோடி பேர் இன்னும் 2-வது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 24-வதுமெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த முகாமை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவமனை டீன் ஜெயந்தி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் … Read more

திமுக கவுன்சிலர் 2 வாக்குகள் பதிவு செய்ததாக வழக்கு – தேர்தல் ஆணையர் விளக்கமளிக்க உத்தரவு

திருச்சி அருகே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் , திமுக கவுன்சிலர் 2 வாக்கினை பதிவு செய்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில், 56-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட மஞ்சுளா தேவி என்பவர் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. 646-வது வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த மஞ்சுளா தேவி, 647-வது வாக்குசாவடியில் முத்துலட்சுமி என்பவரின் வாக்கினையும் பதிவு செய்ததாக கூறப்பட்டது. … Read more

சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை… என்ன காரணம்?

சவுதி அரேபியாவில் கொலை முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு வகையான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 81 பேருக்கு, ஒரே நாளில் மரண தண்டணை விதித்து அதிரடி காட்டியுள்ளது. 1979 ஆம் ஆண்டு மக்காவில் உள்ள பெரிய மசூதியைக் கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 63 போராளிகளுக்கு ஜனவரி 1980-ல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையின் எண்ணிக்கையை விட இன்று அதிக நபர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் கீழ் குற்றவாளிகளின் தலையை … Read more

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நாளை தொடக்கம்.!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நாளை தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை … Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலைகளில் சிக்கிய மூதாட்டி மீட்பு.!

திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலைகளில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டார். திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த மாரியம்மாள் நேற்று திருச்செந்தூர் கோவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு காலில் பாதிப்பு ஏற்பட்டதால் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு கூச்சலிட்டார். அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக கடலில் நீந்தி சென்று மாரியம்மாளை பத்திரமாக மீட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த … Read more

தமிழகத்தில் 87 சதவீதத்துக்கும் மேல் நோய் எதிர்ப்பு சக்தி – எத்தனை வைரஸ்கள் வந்தாலும் கவலை வேண்டாம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 87 சதவீதத்துக்கு மேல்நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதால், எத்தனை வைரஸ்கள் வந்தாலும் கவலைப்பட தேவையில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் 24-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம்இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பிரதான சாலையில் உள்ள மீனவர் சமூக நலக்கூடத்தில் நடந்த தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், … Read more

மதக்கலவரங்களை தடுக்க மாவட்டந்தோறும் குழு – அமைப்பு முறையும், செயல்பாடும் என்ன?

மதக்கலவரங்களை தடுக்க கோவையைப் போன்று, மாவட்டந்தோறும் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள குழுவின் அமைப்பு முறை, செயல்பாடுகள் என்ன? இதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான அவசியம் குறித்து தெரிந்துகொள்வோம். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகளின் 3 நாட்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் நிறைவு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மதக்கலவரங்களை தடுப்பதற்கு கோவையில் இருப்பது போன்ற தனி குழு, மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும் எனக் … Read more