சென்னையில் சூப் கடைக்காரர் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் வீடியோ வைரல்.!

சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் சூப் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை மீண்டும் சூப் போட பயன்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது. சென்னை – பழைய மகாபலிபுரசாலை, காரப்பாக்கம், நடை மேம்பாலம் அருகே, கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் சாலையோரத்தில் மாலை 5 முதல் இரவு வரை, தள்ளுவண்டியில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு சூப் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள், சூப் குடித்து விட்டு எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு … Read more

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் உற்பத்தி, கொள்முதல் விலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படுமா? – டாஸ்மாக் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் உற்பத்தி, கொள்முதல் விலை விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு டாஸ்மாக் பணியாளர்கள், சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட் டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கான மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை அண்மையில் தமிழக அரசு உயர்த்தியது. இதனால், மதுபானங்களின் விலைரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஒரு நாளுக்கு ரூ.10.35 … Read more

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகம் முழுவதும் நேற்று (சனிக்கிழமை) நடந்த தேசிய லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 79 ஆயிரத்து 599 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நேற்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு அமர்வுகளும், மதுரைக் கிளையில் நான்கு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என மாநிலம் முழுவதும் மொத்தம் 419 அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன. இதில், 334 கோடியே 91 லட்சத்து 11 ஆயிரத்து … Read more

ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பு… தொண்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு?

Tamilnadu News Update : முதல்வர் ஸடாலினை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சொல்லி தொண்டர்களின் வாக்குறுதி வழங்கியவர்கள் அதனை நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றிய திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் தொண்டர்கள் பரபரப்பாக இயங்கி வந்தத. அப்போது ஸ்டாலின் அணி என்று தொடங்கப்பட்ட மொபைல் செயலியில், ஸ்டாலினை சநதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி … Read more

கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் 3-ஆவது நாளாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ.!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் 3-ஆவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. மச்சூர் வனப்பகுதிக்குட்பட்ட தோகைவரை வனப்பகுதியில் காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள் தீயில் கருகி நாசமாகின. ஒரு பகுதியில் வனத்துறையினர் தீயை அணைத்து வந்தாலும் மற்றொரு பகுதியில் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது.கொளுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதால் தோகைவரை, மச்சூர் … Read more

திருச்சியில் விற்பனைக்காக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த 500 கிளிகள், முனியாஸ் குருவிகள் மீட்பு

திருச்சி பாலக்கரை பகுதியில் விற்பனை செய்வதற்காக கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 500 பச்சைக் கிளிகள் மற்றும் 300 முனியாஸ் குருவிகளை வன பாதுகாப்பு படையினர் மீட்டனர். திருச்சி பாலக்கரை குருவிக்காரன் தெருவிலுள்ள சில வீடுகளில் பச்சைக் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வன பாதுகாப்புபடையின் உதவி வன பாதுகாவலர் நாகையா தலைமையிலான குழுவினர் நேற்று அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் முன்பகுதியில் கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகள் … Read more

கோடை வெயிலுக்கு இதான் பெஸ்ட்… வெள்ளரி – எலுமிச்சை ஜூஸ் சிம்பிள் பாருங்க!

Summer drinks in tamil: நீர்ச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறி வகைகளில் வெள்ளரிக்காய்க்கு தனி இடம் உண்டு. இந்த அற்புத காயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் நிரம்பியுள்ளது. மேலும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்தில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. வெள்ளரியுடன் எலுமிச்சை சேர்த்து ஜூஸ் செய்து பருகி வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை அடித்து விரட்டும். மேலும், பளபளப்பான சருமத்திற்கும், உடல் சூட்டை தணிப்பதற்கு இந்த … Read more

பள்ளியின் மாடியிலிருந்து குதித்த மாணவி.. சோகத்தில் குடும்பத்தினர்.!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர், இவரது மனைவி சந்தனமாரி. இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் வாந்தி வருவதாக கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற மாணவி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் கால் எலும்பு முறிந்து, வயிற்றில் பலமாக அடிபட்ட நிலையில் … Read more

ராமநாதபுரத்தில் கோரிக்கை மனு அளித்த இரண்டே நாட்களில் நடவடிக்கை.. புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட மகளிர்கான கட்டணமில்லா பேருந்து.!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட மகளிர்கான கட்டணமில்லாபேருந்தை கிராமமக்கள் மலர்தூவி வரவேற்றனர். திருவரை, முதலியார் புதுக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சாயல்குடியில் இருந்து மகளிர்கான கட்டணமில்லா பேருந்தை இயக்க வேண்டி தமிழக முதலமைச்சரின்  தனிப்பிரிவுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டே நாட்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தின் ஓட்டுனர்-நடத்துனர் ஆகியோருக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். Source link