மார்ச் 12: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,815 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

திருச்சி: இரண்டு இடங்களில் ஓட்டு போட்டதாக திமுக பெண் கவுன்சிலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

திருச்சி மாநகராட்சியில் இரண்டு இடங்களில் ஓட்டு போட்டதால் திமுக பெண் கவுன்சிலர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கவிதா என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி, 56வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா தேவியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கவிதா என்பவர், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மஞ்சுளா தேவி இரண்டு இடங்களில் … Read more

தி.மு.க-வில் நம்பர் 3 செந்தில் பாலாஜி… மாற்றத்தை உணர்த்திய விறு விறு காட்சிகள்!

Tamilnadu News Update : அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்து தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கட்சியில் வேகமாக வளர்ந்து வருவது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகளின் திருமணத்தில் நடந்த நிகழ்வு தெளிவாக உணர்த்தியுள்ளது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. … Read more

இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்.!

தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள சுமார் 1 கோடியே 33 இலட்சம் நபர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகரட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-171, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பிரதான சாலையில் உள்ள மீனவர் சமூக நலக்கூடத்தில் இன்று நடைபெற்ற 24ஆவது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் … Read more

திருந்த மாட்டோம்.. வருந்த மாட்டோம்.. பூரணி மம்மி ரிட்டர்ன்..! ரூ 700 க்கு எனர்ஜி தரிசனமாம்..!

சென்னையில் அடுத்தவர் கணவரை அபகரித்த பஞ்சாயத்தில் சிக்கி சர்ச்சைக்குள்ளான அன்னபூரணி எனர்ஜி தரிசனம் தருவதாக கூறி மீண்டும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குதிரை சவாரி செய்வது போல ஆடிக்கொண்டே தன்னை கடவுளின் அவதாரம் என்றும் திவ்ய தரிசனம் தருவதாக கூறி ஆசி வழங்கியதால் சர்ச்சையில் சிக்கியவர் அன்னபூரணி..! இந்த செயல், இந்து கடவுளர்களை இழிவுபடுத்தும் செயல் என்று அவருக்கு கண்டனம் தெரிவித்த பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அன்னபூரணி … Read more

'எளிய மக்களுக்கு குறைந்த விலை வீடுகள்' – கட்டுமான நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மத்திய – மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் கட்டுநர்கள். நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் மத்திய – மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரத்தில், 30வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது: இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த அழைப்பிதழின் … Read more

"என் கணவரின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது" – பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியரிடம் இளம்பெண் மனு

செங்கல்பட்டு அருகே 2 மாதத்திற்கு முன்பு இறந்த தன் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்தார். செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஞானசுந்தரம் – ஷபானா தம்பதியர். ஞானசுந்தரம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் கேட்டரிங் சர்வீஸ் சென்டரில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி இரவு … Read more

பறந்து பறந்து கேட்ச் பிடித்த ஆஸி,.வீரர்… வைரலாகும் ‘வாட் அ கேட்ச் மொமெண்ட்’

Hilton Cartwright Tamil News: ஆஸ்திரேலியாவில் 2021–22 ஆண்டுக்கான மார்ஷ் ஒரு நாள் கோப்பை தொடர் (உள்ளூர் போட்டி) நடைபெற்றது. இத்தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று அரங்கேறிய நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸ் அணிகள் இந்த இறுதிப்போட்டியில் பலப்பரீட்ச்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜே ரிச்சர்ட்சன் 44 ரன்கள் எடுத்திருந்தார். நியூ … Read more

தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் மார்ச் 15 அன்று மிதமான மழை பெய்யக் கூடும் ; வானிலை ஆய்வு மையம்

மார்ச் 15 அன்று தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 14 வரை தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது. வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மார்ச் 15 அன்று தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. மார்ச் 16 அன்று … Read more

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக இளைஞர் நாடு திரும்ப விருப்பம்

கோவை : உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்- ஜான்சி லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு சாய் நிகேஷ் (21), சாய் ரோகித் ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் சாய் நிகேஷ், கடந்த 2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். இறுதியாண்டில் படித்து … Read more