வாந்தி வருவதாக வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற மாணவி எடுத்த விபரீத முடிவு

திருச்செங்கோடு அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி சங்கர் (45). இவரது மனைவி சந்தனமாரி (35) இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் அர்ச்சனா என்ற 14 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், மகள் அர்ச்சனா திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று மதியம் வாந்தி வருவதாகக் … Read more

ஏவுகணை விவகாரம்; கூட்டு விசாரணை கோரும் பாகிஸ்தான்

‘Profound level of incompetence’: Pakistan seeks joint probe after India says it accidentally fired missile: பாகிஸ்தானில் ஏவுகணை வெடித்த நிகழ்வில் “தொழில்நுட்பக் கோளாறே காரணம்” என்று இந்தியா ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான் சனிக்கிழமையன்று இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை துல்லியமாக ஆராய ஒரு கூட்டு விசாரணையை கோரியுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் “விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை” என்று நிம்மதி தெரிவித்தது மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக … Read more

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… இளளைஞர் மீது பாய்ந்தது போக்சோ..!

சிறுமியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மாகலிங்கம். இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவியின் உறவினர்கள் அவரை எச்சரித்து அனுப்பி கேட்காமல் அந்த மாணவியை தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். அந்த மாணவியை பின்தொடர்ந்து அவர் தனியாக பேச வேண்டும் இல்லையெனில் அவரை கொலை செய்து … Read more

உக்ரைன் இராணுவத்தில் இணைந்த கோயம்புத்தூர் மாணவர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோயம்புத்தூர் மாணவர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த சுப்பிரமணியன்பாளையம்  பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ், உக்ரைனில் விமானவியல் படித்து வந்தார். உக்ரைனில் போர் உக்கிரமடைந்த சூழலில், பொதுமக்கள் ராணுவத்தில் இணையலாம் என்ற உக்ரைனின் அழைப்பை ஏற்று, அந்நாட்டு ராணுவத்தில் சாய்நிகேஷ் இணைந்தார். இதுகுறித்து மத்திய, மாநில உளவுத்துறை அமைப்புகள் சாய்நிகேஷின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், அவர் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருந்ததும் … Read more

நீலகிரி பெண் கைவினைக் கலைஞர்களுக்கு கிடைத்த விருதால் தோடர் இன மக்களுக்கு கிடைத்த கூடுதல் கவுரவம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இன கைவினைக் கலைஞர்கள் 2 பேருக்கு ‘நாரி சக்திபுரஸ்கார்’ விருது வழங்கப்பட்டுஉள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தொழில்முனைவோர், விவசாயம், சமூகப் பணி, கல்வி மற்றும் இலக்கியம், மொழியியல், கலை மற்றும்கைவினை அறிவியல், தொழில்நுட்பம், மாற்றுத் திறனாளிகள் உரிமை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘நாரி சக்திபுரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. பூத்துக்குளி எம்ப்ராய்டரி சர்வதேச பெண்கள் தினத்தைஒட்டி டெல்லியில் … Read more

வீதி உலாவின் போது சாலையில் கவிழ்ந்த கோவில் தேர் – பொள்ளாச்சி அருகே பரபரப்பு

பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் பழனியூர் கோவில் திருவிழாவில் வீதிஉலா சென்ற தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பழனியூர் மாகாளியம்மன் குண்டம் தேர்த் திருவிழா கடந்த மார்ச் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதனையடுத்து நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர் அப்போது கோட்டூர் சந்தைப்பேட்டை … Read more

19 நாள்களுக்கு பிறகு ஜெயக்குமார் விடுதலை – அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மூன்று வழக்குகலிலும் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, சென்னை புழல் சிறையிலிருந்து இன்று காலை அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீது தேர்தல் விதிமுறையை மீறி சாலை போராட்டத்தில் … Read more

4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.  இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன் படி, இந்த மாதம் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  காலை 7 மணி முதல் பகல் … Read more

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டுமென நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக நிரந்தர வைப்பீடாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது நடிகர் விஷாலின் நிறுவனம், படத் தயாரிப்புக்காக பெற்ற ரூ. 21.29 கோடியை லைகா செலுத்தியிருந்தது தொகையை செலுத்தாமல் “வீரமே வாகை சூடும்” படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமையை விற்க தடை … Read more

அசாம் இளைஞர் ரயிலில் திடீரென உயிரிழப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் சடலத்தை மீட்டு போலீஸ் விசாரணை

திருப்பூர்: அசாம் மாநில இளைஞர் ரயிலில் உயிரிழந்த நிலையில், சில மணிநேர பயணத்துக்கு பின் அவரது உடல் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருப்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஒரு நாள் சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ம் தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று காலை 10.45 மணிக்கு திருப்பூருக்கு வந்தடைந்தது. ரயிலில் எஸ்.3 பெட்டியில் இருந்து 2 … Read more