வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.!

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.                          இன்று விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி … Read more

உச்சநீதிமன்ற பிணை ஆணை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைப்பதில் தாமதம் ; மீண்டும் வீடு திரும்பினார் பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பிணை ஆணையின் நகல் புழல் சிறைச்சாலை அதிகாரிகளை வந்தடையாததால் அவர் தொடர்ந்து பரோலில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு, புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு வழங்கிய பரோலை ரத்து செய்ய, பேரறிவாழன் திருப்பத்தூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் உச்சநீதிமன்ற ஆணையின் நகல் இன்னும் புழல் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் … Read more

தமிழக ஆளுநர் தஞ்சை வருகை: முறையான இட ஒதுக்கீடு கோரி முன்னாள் படைவீரர்கள் மனு

தஞ்சாவூர்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்தார். தஞ்சாவூர் புதிய சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள ஆளுரை முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கத்தினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, அரசுத் துறைகளில் முன்னாள் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. மற்ற மாநிலங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பின்பற்றப்படுவதில்லை. … Read more

‘சமூகவலைத்தள வன்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்’ – முதலமைச்சர் அறிவுறுத்தல்

சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில் பதிவிடுவோர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றங்களை குறைப்பதைவிட, அவை நடக்காமல் தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் மதமோதல்களை சிலர் உருவாக்க முயற்சிப்பதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமூகவலைத்தளத்தை நல்லதுக்கும், … Read more

TNPSC குரூப் 2,2ஏ தேர்வு விண்ணப்பம்; தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

TNPSC group 2 exam chances to correct errors in application: குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்துகொள்ள விரும்பினால், மார்ச் 23 வரை திருத்திக் கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் … Read more

இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை .. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கடல் மற்றும் அதனை தென் மேற்கு வங்ககடல் பகுதியில் ஓட்டியுள்ள பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் நாளை மற்றும் நாளை … Read more

ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை.! ஆசிரியரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என மாணவி கடிதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி பேராசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிந்தாமணியை சேர்ந்த கணேசன் மாடத்தி தம்பதியினரின் மூத்த மகள் இந்துப்பிரியா, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான புளியங்குடி மனோ கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரிக்கு சில மாணவிகள் செல்போன் கொண்டுவந்ததாகவும், அதனை இந்துப்பிரியா வாங்கி பார்த்த போது இரண்டு பேராசிரியர்கள்  திட்டி மன்னிப்பு … Read more

பள்ளிகளில் தொடரும் பாலியல் தொல்லை புகார்கள்; நீதியை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வோம்: கல்வி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மதுரை: பள்ளிகளில் தொடரும் பாலியல் புகார்கள் மீதான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதியை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வோம் என கல்வித்துறை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. மதுரை முனிச்சாலை ஜெயா ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தமனுவில், தங்கள் பள்ளி ஆசிரியைகள் இருவர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: அரசு தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தில் … Read more

"சிறையில் குடிக்க தண்ணீர் இல்லை; கட்டில் இல்லை, தரையில்தான் படுத்திருந்தேன்" – ஜெயக்குமார்

தாம் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினர் தம்மை சிறைக்கு அழைத்துச் செல்லாமல் அலைக்கழித்ததாகவும் சிறையில் கட்டில் இல்லாமல் தரையில் படுக்க நேர்ந்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். திமுக பிரமுகரை தாக்கியது, போராட்டத்தில் ஈடுபட்டது ஆகிய வழக்குகளில் பிணை கிடைத்த நிலையில் நில அபகரிப்பு வழக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து இன்று ஜெயக்குமார் விடுவிக்கப்பட்டார். அவரை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் … Read more

நீளமான, ஷைனி தலைமுடிக்கு சூப்பர் ஹோம்மேட் ஷாம்பு! நீங்களே செய்யலாம்.. எப்படினு பாருங்க!

நாம் அனைவரும் நீளமான, பளபளப்பான கூந்தலை விரும்புகிறோம். கூந்தலை நீளமாக வளர்ப்பது எப்படி என பல கட்டுரைகள், வலைப்பதிவுகளை படித்து சில டிரிக்ஸ் முயற்சி செய்து பாத்திருப்போம். அதில் சில குறிப்புகள் வேலை செய்யும். சில தோல்வியடையும். குறிப்பாக முடி உதிர்தல் என்பது பலர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. சரியாக கவனித்த போதிலும்’ சிலருக்கு மெதுவாகவே முடி வளர்கிறது. உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால், பயனுள்ள வீட்டு வைத்தியம் இங்கே இருக்கிறது. உங்கள் சொந்த ஷாம்பூவை … Read more