EPFO New Interest Rate: தொழிலாளர்கள் ஷாக்; 40 ஆண்டுகளில் இல்லாத வட்டி சரிவு!

குவஹாத்தியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில், 2021-22 ம் நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி விகிதத்தை 8.10% ஆக குறைக்க பரிந்துரைப்பட்டதாக, இரண்டு வாரிய உறுப்பினர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர். இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த வட்டி விகிதமாகும். EPFO வாரியம் கடந்தாண்டு மார்ச் மாதம், 2020-21 நிதியாண்டிற்கான 8.5 சதவீத வட்டி விகிதத்திற்கான பரிந்துரையை இறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. மத்திய வாரிய குழு கூட்டமானது, … Read more

கோவில் சொத்துகளை வாடகைக்கு விடும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வெளீயீடு..!

கோவில் சொத்துக்களை வாடைகைக்கு விடும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அறநிலையத்துறை வெளியிடுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்யும்போது திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நியாய வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழங்கப்பட்ட … Read more

சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் சாதி,மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மூன்றாவது நாளாக இந்த மாநாடு நடைபெறுகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மோதல்களை சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக … Read more

பாசப்போராட்டம்: ஆசிரியரின் வருக்கைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்

உடுமலை அருகே உணர்ச்சிவசத்துடன் ஒட்டு மொத்த கிராமமே ஆசிரியையின் வருகையை எதிர்பார்த்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பாசப் போராட்டம் நடத்திவருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கல்லாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கொம்மேகவுண்டன் துறை கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகே கடைக்கோடியில், கண்ணுக்கு எட்டாத தூரத்தில் மறைவாக அமைத்திருக்கும் இக்கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் இளம் வயதுடைய பெரும்பாலான ஆண்களும் பெண்களும் பட்டப்படிப்பு முடித்தவர்களாக உள்ளனர். வழிகாட்டி இல்லாமல் படித்த படிப்புக்கு ஏற்ற … Read more

பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை: திசைமாறியது எப்படி? பின்பற்றப்படும் நெறிமுறை என்ன?

பாகிஸ்தான் வியாழக்கிழமை அன்று, இந்தியாவின் ஏவுகணை தங்கள் எல்லைக்குள் 124 கிமீ தாண்டி விழுந்ததாக தெரிவித்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த இந்திய பாதுகாப்புத் துறை, ஏவுகணை தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துவிட்டதாக தெரிவித்தது. சோதனையின் போது, ஏவுகணை பாதையை மாற்றி தவறாக செல்வது மிகவும் அரிதான நிகழ்வாகும். இந்தியாவும், பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை குறித்து ஒருவருக்கொருவர் தெரிவிக்க வேண்டுமா? நிச்சயம் சொல்ல வேண்டும். 2005 இல் கையெழுத்திடப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளின் விமான சோதனையின் … Read more

2047ஆம் ஆண்டு உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும் – ஆளுநர் ஆர். என். ரவி பேச்சு..!

மாணவர்களின் ஆராய்ச்சி நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். பாரதியார் பல்கலைக்கழகம், அனைத்து இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு ஏற்பாட்டில் தென்மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில் உயர்கல்வியை மாற்றியமைக்க பாடுபட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கொள்கை மாற்றப்படுவதால் எந்த பலனும் கிடைக்கவில்லை அதற்குபதிலாக மாநிலங்கள் இடையே சமநிலையற்ற தன்மை உருவாக்குவதாகவும் … Read more

உக்ரைனில் இருந்து வந்த தமிழக மாணவர்களை விமான நிலையத்தில் வரவேற்ற முதலமைச்சர்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களைச் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். உக்ரைனில் இருந்து டெல்லிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர் டெல்லியிலிருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, அப்துல்லா, கலாநிதி வீராசாமி ஆகியோரும் வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று பூங்கொத்துக் கொடுத்து மாணவர்களை வரவேற்றார். Source link

டாஸ்மாக் கடைகளை காப்பாற்ற அரசு கிராமசபை தீர்மானங்களை அவமதிக்கிறது: மநீம

சென்னை: நீதிமன்றங்களில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையின் மூலம் கிராமசபை கூட்ட தீர்மானங்களை அவமதிப்பதே வழக்கு பதிவு செய்ய காரணம் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், மக்களுக்கு தொல்லை தரும் டாஸ்மாக் கடைகளை குறிப்பாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் … Read more

உக்ரைனிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த கடைசி மாணவர்கள் குழு வருகை – முதல்வர் வரவேற்பு

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கடைசிக் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. உக்ரைனில் சிக்கி தவித்த இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மத்திய அரசின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் சிக்கித் தவித்த ஆயிரத்து 860 மாணவர்களை இதுவரை மீட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் … Read more

கூட்டாட்சி முதல் கல்விக் கொள்கை வரை; ஆளுநர் – முதல்வர் மாறுப்பட்ட கருத்து

Stalin and Governor has different opinion in federalism to NEP: நேற்று (11.03.2022) நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் கல்விக் கொள்கை முதல் கூட்டாட்சி வரையிலான பல்வேறு பிரச்னைகளில் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்தனர். நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில், ஆறு தென் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் 100 துணைவேந்தர்கள் கலந்துக் கொண்ட தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு, ‘உயர்கல்வி நிறுவனங்களின் மூலம் … Read more