‘தாயகம் வந்தது அதிசயம்… சிக்கிக்கொண்ட பயத்தில் இருந்தோம்’ சுமி மாணவர்களின் வேதனை குரல்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, 15 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்க சென்ற மூன்று விமானங்களில், முதல் விமானம் 242 இந்தியர்களுடன் நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தது. அதில் வந்த, சுமி மாநில பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவரான மோஹித் குமார் கூறுகையில், தாயகம் வந்தது அதிசயம். போரை, ஹாஸ்டல் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தது மிகவும் விசித்திரமானது. தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடைபெற்றது. ஒவ்வொரு 4-5 … Read more

சென்னையில் முக்கிய பகுதியில் இன்று மின் தடை..!

பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13 மற்றும் 15 வது தெரு, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, சிவஇளங்கோ 70 அடி சாலை, ஜவAர் நகர் 1, … Read more

ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

சென்னை அடுத்த புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை ஜாமீனில் வெளியே வந்தார். நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, 20 நாட்களாக சிறையில் இருந்த ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  விடுதலையான ஜெயக்குமாருக்கு சிறை வாசலிலும், வீட்டிலும் திரளான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Source link

அரசு மருத்துவமனைகளில் இனி ஒப்பந்த முறை பணி நியமனம் இருக்காது: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: அரசு மருத்துவமனையில் இனி ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல், நிரந்தர அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடியில் தொடங்கப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம்,ரூ.2.44 கோடியில் ‘வாழ்வூட்டும்மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிதுறை’யாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த துறையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். புதுப்பிக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் … Read more

கெட்ட கொழுப்பை குறைக்கும் கடலைப்பருப்பு சுண்டல்… சிம்பிள் டிப்ஸ் பாருங்க!

 Kadalai Paruppu Sundal in tamil: பூமிக்கு மேலே விளையும் பருப்பு வகைகளில் ஒன்றான கடலைப்பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து உண்பதுடன், தனியாக சமைத்து உண்டால் இன்னும் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இவை பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. கடலை மாவு தோல் சம்மந்தமான பிரச்சனைக்ளுக்கு தீர்வு தருகிறது. குறிப்பாக, தோலில் சுருக்கம், சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை கொண்டவையாக இவை உள்ளன. கடலை பருப்பில் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு.!!

இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13.03.2022; தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.03.2022,15.03.2022: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் … Read more

மதுரையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அமைத்த ஏ.பி.முத்துமணி மறைவு.. அவரது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் இரங்கல்.!

மதுரை மாவட்டத்தில்  தமக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்த மறைந்த ஏ.பி.முத்துமணியின்  குடும்பத்தாரிடம் நடிகர் ரஜினிகாந்த் போனில் ஆறுதல்  கூறினார். கடந்த 8ஆம் தேதி இரவு மதுரை மாநகர ரஜினி ரசிகர் மன்ற கௌரவ ஆலோசகர் ஏ.பி.முத்துமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவருடைய மனைவியிடம் தொலைபேசி வழியாக பேசிய ரஜினி,  முத்துமணி இழப்பு பெரிய வருத்தத்தை அளிக்கிறது எனவும் அவருடைய மறைவிற்கு அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  கூறினார்.       … Read more

‘தினமணி கதிர்’ இதழின் முன்னாள் ஆசிரியர் கே.ஆர்.வாசுதேவன் நூற்றாண்டு பிறந்தநாள்: குடியரசு துணைத் தலைவர், பிரதமர் வாழ்த்து

சென்னை: ‘தினமணி கதிர்’ இதழின் முன்னாள்ஆசிரியர் மறைந்த கே.ஆர்.வாசுதேவன் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர், பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக முன்னாள் எம்.பி.யான வா.மைத்ரேயனின் தந்தை கே.ஆர்.வாசுதேவன். கடந்த 1922 மார்ச் 20-ம்தேதி பிறந்த அவர், 1987 ஆக.19-ம்தேதி காலமானார். 1943-ம்ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அவர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கோபாலகிருஷ்ண கோகலே நிறுவிய இந்திய பணியாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்தார். அத்துடன் இச்சங்கத்தின் கேரள மாநில … Read more

வெந்து தணிந்த கொடைக்கானல் மலை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 நாள்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ அணைக்கப்பட்ட நிலையில், கோடைகாலத்தில் காட்டுத் தீயைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென பற்றிய காட்டுத் தீ நேற்று அதிக வேகத்துடன் பரவியது. இதில் 500 ஏக்கர் பரப்பில் பசுமரங்களும் புல்வெளியும் தீக்கிரையாகின. வனத்துறையினர் 50க்கும் அதிகமானோர் பல்வேறு குழுக்களாக தீ தடுப்பு எல்லைகளை ஏற்படுத்தி நெருப்பைக் கட்டுப்படுத்தினர். … Read more