எனது முடிவுகளில் குடும்பத் தலையீடு இருக்காது – தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி சிறப்புப் பேட்டி

”எங்கள் வார்ட்டில் அடிக்கடி கட்சிக் கூட்டங்கள் நடக்கும். அதனை நான் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அவ்வாறுதான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது” என்கிறார் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றுள்ள க.வசந்தகுமாரி. கல் உடைக்கும் தொழிலாளியின் மகள் வசந்த குமாரி. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர், தமிழகத்தின் இளம்வயது மேயர் என்ற பெருமைக்குரியவராகியுள்ளார். அடித்தட்டு குடும்பத்திலிருந்து வந்துள்ளதால் வசந்தகுமாரியின் பார்வையும், பேச்சும் அம்மக்களை நோக்கியதாகவே உள்ளது. ’இந்து தமிழ் திசை’ … Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் சுட்டெரிக்க போகும் வெயில்.!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும். தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் . தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டி இந்தியப்பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, … Read more

இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சசிகலா உறவினரான இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் , சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிமுக சார்பில் சேலத்தில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு சீட் வாங்கித் தருவதாக இளவரசியின் மருமகனான ராஜராஜன் கூறினார். இதற்காக அவர், என்னிடமிருந்து சுமார் 5 … Read more

விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.. காவல்துறை விசாரணை..!

விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மன் . இவரது மகன் மணிகண்டன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றிபிபார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சம்பவதன்று அவ்ர் விடுதியில் அறையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு … Read more

திண்டுக்கல் கொசவபட்டி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்; 40 பேர் காயம் 

திண்டுக்கல்: கொசவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்களை காளைகள் தூக்கிவீசி பந்தாடியது. இதில் 40 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 300 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு பல்வேறு குழுக்களாக களம் இறக்கப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஜல்லிக்கட்டு … Read more

சாலையை கடக்க முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

சாலையை கடக்க முயன்ற இளம்பெண் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், புதுப்பட்டியில்  தனியார் காட்டன் மில்லில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பீகாரைச் சேர்ந்த நிமிகுமாரி (வயது 18)  என்ற பெண் குடும்பத்துடன் தங்கியிருந்து பணி புரிந்து வந்தார். இந்நிலையில், சம்வதன்று பணி முடித்து விட்டு வீடு திரும்பும் போது மில் வாசல் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது சரக்குவாகனம் … Read more

மதுரையில் கைவிடப்பட்ட நவீன காய்கறி அங்காடி வளாகம்: முதல்வர் மறுபரிசீலனை செய்ய வியாபாரிகள் எதிர்பார்ப்பு 

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் ரூ. 85 கோடியில் அமைவதாக 11 ஆண்டிற்கு முன் திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிரந்தர காய்கறி அங்காடி திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வியாபாரிகள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டில் குளிரூட்டும் வசதி எதுவும் இல்லை. அதனால், விலையேற்றவும், காய்கறிகள் அழிவையும் தடுக்க முடியவில்லை. அதனால், இப்பகுதியில் 27 ஏக்கரில் மத்திய … Read more

கொடியேற்றத்துடன் தொடங்கியது..கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா.!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா இலங்கை பக்தர்கள் ஒன்றிணைந்து கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு இவ்வாலய திருவிழா இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் இந்தியாவைச் சேர்ந்த 76 பக்தர்களும், இலங்கையை சேர்ந்த 88 பக்தர்களும் பங்கேற்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து சிலுவைப்பாதை சிறப்பு திருப்பலி மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை காலையில் மீண்டும் இந்தியா-இலங்கை பக்தர்கள் … Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ: அணைக்க முடியாமல் திணறல்

கொடைக்கானல்: கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள் கருகிவருகின்றன. பரவிவரும் காட்டுத்தீயை அணைக்க நவீன உபகரணங்கள் இல்லாததால் தீ பரவுவதை தடுக்கமுடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இரவில் குளிர்ந்த வானிலை காணப்பட்டாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்துவருகிறது. கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திலையில், கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு … Read more