தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்-டாஸ்மாக் நிர்வாகம்.!

டாஸ்மாக் கடைகளில் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனிமேல் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், சரக்கு இருப்பு மற்றும் விற்பனை குறித்த 27 வகையான பதிவேடுகளை முறையாக தினமும் பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது. Source link

இருசக்கர வாகனத்தோடு எரிந்த நிலையில் ஸ்டூடியோ கடை உரிமையாளர் சடலமாக மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தோடு உடல் எரிந்த நிலையில் ஸ்டூடியோ கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டார். நத்தபட்டியைச் சேர்ந்த  போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரான பாலசுப்பிரமணி, நேற்றிரவு வேடசந்தூரில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின் நத்தப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை நத்தப்பட்டியில் உள்ள தென்னை மரத்தோட்டத்திற்கு அருகே பாலசுப்பிரமணி அவரது இருசக்கர வாகனத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக … Read more

அறுவை சிகிச்சை வசதிகளுடன் சேலம் அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனி சிகிச்சை மையம் துவக்கம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்காக சிறப்புத் தனி மருத்துவ சிகிச்சை மையத்தை ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் துவக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கு என தனி சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக சேலத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு … Read more

எது பெண் சுதந்திரம் தெரியுமா? – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு

பெண்களுக்கு எவ்வளவு பிரச்னை வந்தாலும் தற்கொலை என்ற முடிவை எடுக்கக் கூடாது என்றும் பெண்கள் தங்களது பிரச்னைகளை கூறும் வகையில் அமைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாமை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் துவக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, மார்ச் 8 மட்டுமின்றி … Read more

ஈழவர் – திய்யா விவகாரம்: மாத கணக்கில் காக்க வைத்த அதிமுக அரசு; ஒரு மணி நேரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அமைச்சர்

“BC அங்கீகாரம் கிடைத்தும் டி.என்.பி.எஸ்.சி.யில் சாதிப் பெயர் இல்லை – அல்லாடும் நீலகிரி திய்யா மக்கள்” என்ற தலைப்பில் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி வெளியிடப்பட்டு சில நாட்களிலேயே திய்யா வகுப்பு டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் இடம் பெறுவதை உறுதி செய்துள்ளார் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரை தொடர்பு கொண்ட போது, உள்ளாட்சி தேர்தல் காரணமாக … Read more

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார் மாநகராட்சி மேயர்.!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை சென்னை அடையாறில் மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்களுக்கான சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதற்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என்ற உன்னதத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலம், … Read more

திருவள்ளூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற மகளிருக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய எம்.எல்.ஏ., V.G.ராஜேந்திரன்.!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ட்ரீம் இந்தியா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் கலந்துக்கொண்டு ஆதரவற்ற மகளிருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். திருவள்ளூர் ஈக்காடு பகுதியில் உள்ள ட்ரீம் இந்தியா தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நடந்த இந்நிகழ்ச்சியில் இலவச ஓட்டுநர் பயிற்சி வகுப்புக்கான வாகனத்தை திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி ராஜேந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, ஆதரவற்ற பெண்கள் 25 பேருக்கு சுயதொழில் … Read more

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து முடிவுக்கு வந்த பரோல்:  புழல் சிறைக்கு திரும்பிய பேரறிவாளன்

திருப்பத்தூர்: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை புழல் சிறைக்கு அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன்(52). முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சிறுநீரக தொற்று, மூட்டு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பரோல் வழங்க … Read more

"சிறுநீர் கழிக்க முடியவில்லை வலிக்கிறது"-சாத்தான்குளம் வழக்கில் சாட்சியமளித்த செவிலி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் தாக்கியதில் சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு வலி இருப்பதாக ஜெயராஜ் கூறியதாக அரசு மருத்துவமனை செவிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் … Read more

தங்கள் ஜோடிகளுடன் வாழ்க்கையை என்ஜாய் செய்யும் செம்பருத்தி பார்வதி, அபி டெய்லர் ரேஷ்மா!

செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும் கடந்த ஆண்டு நவம்பரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டனர். ஷபானா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோர் சம்மதமில்லாமல், திடீரென திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மணமான ஒரு மாதத்துக்குள்ளே இவர்கள் … Read more