சேலம் மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் மறைமுக தேர்தலை தள்ளிவைத்தது ஏன்? – அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டத்தில் 4 பேரூராட்சிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நங்கவள்ளி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர்பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதை எதிர்த்து 4 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக கவுன்சிலர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்தனித்தனியாக 4 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி … Read more

விருப்பமில்லா திருமணம்.. மணமுடித்த ஐந்தே நாள்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

சென்னை – அம்பத்தூர் அருகே திருமணமான ஐந்தே நாட்களில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடக்கு கொரட்டூர் – அக்ரகாரத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும், சேலத்தைச் சேர்ந்த அவரது உறவினர் ராஜா என்பவருக்கும் கடந்த 4 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் புதுமணத் தம்பதியர் சேலத்திலிருந்து கொரட்டூர் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் … Read more

சிம்புவுடன் அடுத்த படம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிளான் இதுதானா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ 18 வருடங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஜனவரி 17 அன்று அறிவித்தனர். இருவரும் தங்களை தனி நபர்களாக புரிந்து கொள்ள நேரம் எடுப்பதால் தனியுரிமை கோரினர். இருப்பினும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தெரிவித்தார். பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ் தனது வரவிருக்கும் படமான மாறனின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது … Read more

பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு கிருஷ்ணசாமி வாழ்த்து.!!

5 மாநில தேர்தலில் பாஜக மற்றும் ஆம்ஆத்மி வெற்றி. புதிய தமிழகம் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் உத்திரபிரதேசம், உத்திரகண்ட்,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது.  இந்த வெற்றிக்கு பின்புலமாக உள்ள பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா  மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய … Read more

தொடக்கப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். உதவி ஆசிரியராக பணி புரிந்து வந்த ஆதி முத்தமிழ்ச் செல்வன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.  போலீசாரின் விசாரணையில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து  போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். Source link

அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

சென்னை: மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது என மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு இயற்றியுள்ள 2021-ம் ஆண்டின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையி்ல் உள்ளது. இந்நிலையில் இந்த … Read more

யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள்’ ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் மாநாட்டில் ஸ்டாலின் கட்டளை

Tamilnadu CM Stalin Speech : யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள் என்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர், ஐபிஎஸ், வனத்துறை, அலுவலர்கள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தின் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளை உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், நமது மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சூழல் … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்.!!

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்  ஜாமீன் உத்தரவில் தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஜெயகுமார் மீது நில அபகரிப்பு புகார் சம்மந்தமாக வழக்கில் கைது செய்யப்பட்டதால், தற்போது சிறையில் இருந்து வருகிறார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணையில் ஜாமீன் … Read more