பராமரிப்பு பணி! ஈரோடு முதல் கோவை வரை ரயில் சேவை ரத்து.!

ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் காரணமாக ஈரோடு முதல் கோவை வரையிலான ரயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும், 14ல் சோமனூர் – வாஞ்சிபாளையத்தில், பாலம் கட்டுமானப்பணி நடைபெற இருப்பதால், மார்ச், 12ஆம் தேதி புறப்பட்டு, 14ஆம் தேதி கோவை வந்து சேர வேண்டிய லோகமான்ய திலக் – கோவை விரைவு ரயில், ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்: புதுச்சேரி பாஜக

புதுச்சேரி: “காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்“ என்று புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கருத்து கூறியுள்ளார். நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம் இன்று மாலை நடந்தது. அண்ணா சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மிஷன் வீதி வரை மேளதாளங்கள் முழங்க நடத்தப்பட்டது. இதில் மகளிர் அணி சார்பில் பாரத மாதா வேடம் அணிந்தும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பாஜக தொண்டர்கள் … Read more

”என்னை அழைக்காமல் அரசு நிகழ்ச்சியா..?” – அதிகாரிகளிடம் திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதம்

’என்னை அழைக்காமல் அரசு நிகழ்ச்சியா..?’ என வசைபாடிய திமுக ஒன்றிய செயலாளரால் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.  செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள புக்கத்துறை பகுதியில் இயங்கிவரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்பாக, மறைந்த முதல்வர் கலைஞரின் ’வருமுன் காப்போம்’ மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், திமுகவைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட குழு … Read more

திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை! டிடிவி தினகரன் கருத்து.!

திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று   வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத்தொடர்ந்து எஞ்சிய ஆறுபேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ‘பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய சிறைக்கைதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்துவிடுவோம்’ என்று கூறி மக்களை ஏமாற்றிய … Read more

இன்னைக்கு நெட்ஃப்ளிக்ஸ்-ல் என்ன பார்க்கலாம்? கார்த்தி சிதம்பரம் சரவெடி ட்வீட்

Congress MP Karthik Chidambaram Twitter Post Viral : இந்தியாவில் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில், உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல கட்டங்களாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. … Read more

ராமேஸ்வரத்தில் அதிகாரிகள் நடத்திய தீடீர் சோதனையில், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 56 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்.!

ராமேஸ்வரத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய தீடீர் சோதனையில், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 56 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுர மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையிலான அதிகாரிகள், ராமேஸ்வரம் நகரில் உள்ள கடைகளில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 20க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து 135 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத மிக்சர், ஸ்வீட் பாக்கெட்டுகளையும், காலாவதியான உணவு பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் … Read more

மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை பத்திரமாக ஒப்படைத்த புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்!

புதுச்சேரி: மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை ஆட்டோ ஓட்டுநர் பத்திரமாக ஒப்படைத்தார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் தன்னுடைய மருமகளை மருத்துவப் பரிசோதனைக்காக புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். பின்னர், ஆட்டோவை திருப்பியபோது எதிரில் டூவீலர் நிறுத்தி இருந்த பகுதியில் 500 ரூபாய் நோட்டு கட்டு சாலையில் கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது அது ரூ.50,000 கட்டு என்பது தெரிந்தது. அப்பணக்கட்டை எடுத்து அதை நேராக … Read more

தேசிய கட்சியாக மாறுகிறதா ஆம் ஆத்மி கட்சி?

இந்த தேர்தலில் பாஜகவைத் தவிர ஆம் ஆத்மி கட்சி மட்டுமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அக்கட்சி பஞ்சாபில் 91 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மேலும், கோவாவில் 2 இடங்களுடன் தனது கணக்கைத் தொடங்கி 6% வாக்குகள் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் 2022-ம் ஆண்டு உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் … Read more

தற்கொலைக்கு முயன்ற பெண் காவல் உதவி ஆய்வாளர்… காவல்துறை தீவிர விசாரணை..!

பெண் காவல் உதவியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் காவல் நிலையத்தில் காவல்  உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லெட்சுமி.  நேற்று இவர் ரவுண்டானா அருகில் பணியில்  ஈடுப்படிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.  அவரை மீட்ட உடனடிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விசாரணையின் போது அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து … Read more

விழுப்புரத்தில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இளைஞர் பலி.!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸும் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் ஜெகநாதன் ஆகிய இளைஞர்கள் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர். ஒதியத்தூரில் இளைஞர்கள் சென்ற பைக்கும் திருக்கோவிலூரில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையை நோக்கிச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இளைஞர்கள் முன்னே சென்ற டூரிஸ்ட் வேனை முந்திச் … Read more