'தாயும் மகனும் நிம்மதியாக தூங்குவர்!'- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 9-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘30 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளனுக்கு ஜாமீன்… தாமதம் செய்வதை எப்படி ஏற்பது எனக் கேட்ட உச்சநீதிமன்றம்! … Read more

சென்னை 2-வது விமான நிலையம் அமைவது எங்கே? 4 இடங்களில் ஆய்வு!

சென்னையில், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கிரீன்ஃபீல்ட் வசதியை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்ட நான்கு சாத்தியமான தளங்களை ஆய்வு செய்து வருகிறது. மீனம்பாக்கத்தில் தற்போது உள்ள வசதிகளுடன் கூடுதலாக புதிய விமான நிலையம் நகருக்கு அருகில் செயல்படும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு’ திருப்போரூர், பாரந்தூர், பண்ணூர், படலம் ஆகிய நான்கு இடங்கள் தமிழக அரசால் … Read more

40 எம்.எல்.ஏ.,க்களை இழக்கும் பாஜக.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.! 

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. பகல் 1.30 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 269 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில், கடந்த 37 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் இரண்டாவது  முறையாக ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை இந்த தேர்தலின் மூலம் பாஜக முறியடித்து இரண்டாவது  முறையாக அரியணை எறியுள்ளது பாஜக … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற 12-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனைஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், 12, 13,14ஆகிய … Read more

இந்தோனேசியா, செஷல்ஸ் நாடுகளில் கைதான தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி யுவராஜ் வேறு சிறைக்கு மாற்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை சிறையில் இருந்த யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 8ம் தேதி யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் 10பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான யுவராஜை நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம் … Read more

EPFO News: ஆவணங்கள் தேவையில்லை; ஃபேமிலிக்கு கிடைக்கிற ரூ7 லட்சத்தை மிஸ் பண்ணாதீங்க! –

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இ நாமினேஷனை தாக்கல் செய்வது அவசியமாகும். இபிஎஃப் இ நாமினேஷன் பிஎஃப் மற்றும் பென்சன் தொடர்பாக ஆன்லைன் பரிவர்த்தனைக்கு இ நாமினேஷன் அவசியமாகும். இதுதவிர, பணியாளர்கள் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI) கீழ் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 7 லட்சம் வரையிலான காப்பீட்டையும் உறுதி செய்கிறது. மேலும், தேவைப்படும் சமயத்தில் நாமினி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு.. திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்.!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு அதிகாரி மூலம் முறைகேட்டினை அரங்கேற்றி சென்னை உயர் நீதிமன்றத்திடம் ‘சான்றிதழ் பெற்ற தி.மு.க.விற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களைப் பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்.” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கு முற்றிலும் முரணான வகையில், ஆளுகிறவர்களைப் பார்த்து மக்கள் மட்டும் அல்ல, அரசு அதிகாரிகளே … Read more

சூர்யா படத்துக்கு புரமோசன் பண்ண நாங்கள் தயாரில்லை..! உஷாரான பா.ம.க தலைமை

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் பிரச்சனை முடிந்து போன விவகாரம் என்றும், அவரது புதிய படத்திற்கு எதிராக, பா.ம.கவினர் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாயாஜால் திரையரங்கில் மட்டும் 69 காட்சிகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கான முன்பதிவில் விறுவிறுப்பு இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில், … Read more

இந்தோனேசியா, செஷல்ஸ் நாடுகளில் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: மநீம

சென்னை: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என்று நடிகர் கமல்ஹாசனை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காலங்காலமாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மீனவர்களும் இதர பகுதி மீனவர்களும் ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் குடும்பங்களைப் பிரிந்து பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்து வருபவர்கள் இவர்கள். இந்த … Read more