பணம் தர மறுத்த தந்தை… இருசக்கர உதிரிபக விற்பனை கடைக்கு தீ வைத்த மகன்..!

குடும்ப பிரச்சினை காரணமாக தந்தையின் இருசக்கர உதிரிபாக விற்பனை கடைக்கு தீ வைத்து எரித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அந்த பகுதியில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்திவருகிறார். மாரியப்பனுக்கு அவரது மகன் லட்சுமணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தந்தையிடம் லட்சுமணன் பணம் கேட்டுள்ளார் அதற்கு மாரியப்பன் தரமுடியாது என மறுத்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ .1 லட்சம் அபராதம்.! சிலம்பரசன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிலம்பரசன் தாக்கல் செய்த வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை சுமார் 3 ஆண்டுகளாக தாக்கல் செய்ய தாமதித்ததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2016-ஆம் ஆண்டில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் தனுக்கு பேசப்பட்ட சம்பளத்தின் பாக்கியை தயாரிப்பாளர் மைகேல் ராயப்பனிடம் இருந்து வசூல் செய்துத்தர கோரி சிலம்பரசன் தரப்பும், படத்தால் தனக்கு … Read more

மார்ச் 9: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,469 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

UP, Punjab Election Results Live: 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை; வெற்றி யாருக்கு?

Go to Live Updates 5 states Assembly election results 2022 live : பஞ்சாப், கோவா, உ.பி., உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இன்று (10/03/2022) தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. பஞ்சாப், கோவாவில் மாற்றத்தை ஏற்படுத்த ஆம் ஆத்மி முயன்று வருகின்ற நிலையில் டெல்லி மாடலும், சமீபத்திய சண்டிகர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இந்த இரண்டு மாநிலங்களிலும் கை கொடுத்துள்ளதா என்பதை இன்றைய … Read more

பேரறிவாளனுக்கு ஜாமின்! கால் நூற்றாண்டு கால சட்டப் போராட்டத்தின் இன்னொரு மைல்கல் என சீமான் கருத்து.!

பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருப்பது கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். நீதியரசர் நாகேஷ்வர்ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள முதன்மைத்துவம் வாய்ந்த இம்முடிவை வரவேற்கிறேன்!  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கினை முன்னின்று நடத்திய மூத்த வழக்கறிஞர் … Read more

ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள நகரில் சிக்கிய 5 தமிழக மாணவர்கள்.. வீடியோ வெளியிட்டு மீட்க கோரிக்கை..!

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றியுள்ள கெர்சன் நகரில் சிக்கி, வெளியேற முடியாமல் தவிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தங்களையும் மீட்க உதவுமாறு வீடியோ மூலம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். ஓசூர் அடுத்த மத்திகிரி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ் என்ற அந்த மாணவர், கெர்சன் நகரில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். கெர்சன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், அங்கிருந்து தன்னால் வெளியேற முடியவில்லை எனவும், தன்னுடன் மேலும் 5 இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பதாகவும் … Read more

பேரறிவாளன் ஜாமீன் ஆறுதல் தருகிறது; இழந்த 30 ஆண்டுகளைத் திரும்பப் பெற முடியுமா? – வைகோ

சென்னை: “பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது“ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் எந்தத் தவறும் செய்யாதவர். ராஜீவ் காந்தி படுகொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்தக் குற்றமும் செய்யாமல், முப்பதாண்டுகள் இளமை வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. தொடக்க காலத்தில் அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார். அவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு இருந்தார். பேட்டரி வாங்கிக் கொடுத்தார் … Read more

`ஆணவக்கொலைய யாராலும் தடுக்க முடியாது!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 8-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை… சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து … Read more

20 நிமிட சந்திப்பு: ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் பேசியது என்ன?

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபி.எஸ் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 20 நிமிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பேசியது என்ன என்பதுதான் அரசியலில் ஆர்வம் உள்ள பலரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ள விஷயமாக உள்ளது. அதிமுக … Read more

மதிமுக பொதுக்குழு! 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தலமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி கால 10 மணிக்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம், கட்சியில் காலியாக உள்ள தலைமை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 … Read more