மதுரை சித்திரைத் திருவிழா.. பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதித்திருந்தது. அதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்களின்றி நடைபெற்று. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. Source … Read more

மது போதையில் பெண்ணைத் தாக்கி தட்டிக் கேட்ட பொதுமக்களையும் சரமாரியாகத் தாக்கிய தலைமைக் காவலர்

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் சாதாரண உடையில் இருக்கும் தலைமைக் காவலர் ஒருவர் மது போதையில் பொதுமக்களைத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கருங்கல்பாளையம் காவல் நிலைய முதல் நிலை காவலரான பாரதி என்பவர், இரவு சாதாரண உடையில் கடைத்தெருவில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் காவலர் பாரதி, “என் கண் முன்பே சண்டை போட்டுக் கொள்கிறீர்களா” என்று சிறுவன் ஒருவனின் சட்டையைப் பிடித்து மிரட்டினார் என்றும் … Read more

மின் கட்டணம் பாக்கி: நாகையில் மத்திய அரசு நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிப்பு

நாகப்பட்டினம்: மின் கட்டணம் பாக்கித் தொகை செலுத்தாத காரணத்தால், நாகையில் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் கிளை அலுவலகம், நாகூர் பண்டகசாலை தெருவில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஆலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், சிபிசிஎல் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக மின் கட்டணம் … Read more

தருமபுரியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டக்கல் கண்டுபிடிப்பு

பென்னாகரம் அருகே நரசிபுரம் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிபுரத்தில் உள்ள கரடு பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால வட்டக்கல் எனப்படும் (கல் வட்டங்கள்) ஈமச் சின்னங்களை புதுபட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள வட்டக்கல் மற்றும் ஈமச் சின்னங்களை முழுமையாக ஆய்வு செய்யும்பொழுது அந்தகால மனிதர்களின் வாழ்க்கைமுறை குறித்த வரலாற்றுச் சுவடுகளைக் கண்டறிய … Read more

எடப்பாடி பழனிச்சாமி தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறுவதா? அ.தி.மு.க எச்சரிக்கை

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ‘சசிகலாவை இணைக்க நெருக்கடி, தனிக்கட்சி தொடக்குகிறாரா பழனிசாமி’ என்று செய்தி வெளியிட்ட தமிழ் இணைய ஊடகத்துக்கு அதிமுக எச்சரிக்கை தெரிவித்துள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி சார்பில், வழக்கறிஞர் ராஜகோபால், பொய்யான செய்திக்காக மன்னிப்பு கோர வேண்டும் என ஊடக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்ததில் இருந்தே, … Read more

உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவு || மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மிக நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் பிணையில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பேரறிவாளனின் சட்டப்பூர்வ விடுதலை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் 2014-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் … Read more

30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தற்போது பரோலில் இருக்கிறார். விடுதலை செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனு விசாரணையின் போது, பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய … Read more

பேரறிவாளனுக்கு ஜாமீன் | ராஜீவ் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் முயற்சி: வழக்கறிஞர் பிரபு தகவல்

புது டெல்லி: “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதி விசாரணை நடத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவே உச்ச நீதிமன்றம் முயற்சிக்கிறது“ என்று பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறியது: “வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் ஏற்கெனவே … Read more

”விருதுநகரில் சமுதாயநலக்கூட நுழைவு வாயிலில் சாதி பெயர் ஏன்?” – உயர்நீதிமன்ற கிளை கேள்வி

விருதுநகர், அணைத்தளப்பட்டி பள்ளி மற்றும் சமுதாயநலக் கூடத்தின் கேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதி பெயரை உரிய காவல்துறை பாதுகாப்புடன் உடனடியாக நீக்கவும் அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் “அணைத்தளப்பட்டி கிராமத்தில் உள்ள சர்வே எண் 534/1, 534/2 ஆகிய பகுதிகள் குறிப்பிட்ட(நாயக்கர்) சமுதாயத்தினரின் பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அவற்றில் … Read more

ராஜீவ் கொலை வழக்கு; 32 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Supreme court grants bails to Rajiv Gandhi assassinated case convict Perarivalan: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ராஜீவ் காந்தி … Read more