சீர்த்திருத்த திருமணம் இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் – முதலமைச்சர்

தமிழகத்தில் இனி எந்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மகளுக்கும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி மகேந்திரன் மகனுக்கும் திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் பேசிய முதலமைச்சர், சீர்த்திருத்த திருமணம் தமிழகத்தில் சட்டமாக இருப்பது போன்று இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் எனவும், அதற்கு தமிழக எம்.பி.க்கள் … Read more

கரூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தி, வங்க மொழியில் 'ஆட்கள் தேவை' அறிவிப்பு சுவரொட்டி

கரூர்: கரூர் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தி, வங்க மொழியில் ஆட்கள் தேவை அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன. கரூர் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கொசுவலை, விசைத்தறி, பேருந்து கூண்டு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மேலும், பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கும். கரூரில் வேலையில்லை என்பதில்லை. ஆட்கள் தான் தேவைப்படுகின்றனர். இந்நிலையில், … Read more

சத்தியமங்கலம்: கிராமத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால், நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 காட்டு யானைகள் … Read more

சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு: வட மாவட்டங்களில் படம் ரிலீஸ் ஆகுமா?

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை (மார்ச் 10) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை எந்த திரையரங்களிலும் சூர்யாவின் படத்தை வெளியிடக் கூடாது என்று வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வட மாவட்டங்களில் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு போலீஸ் சித்ரவதையில் … Read more

நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு.!

நாட்டு இன மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாட்டு கலப்பின மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்றும், நாட்டு மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சான்று அளித்த பிறகே அவற்றை ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும் … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,11ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறியுள்ள வானிலை மையம், 12-ந்தேதி தென் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு சாதி ஆணவத்திற்கு எதிரான சவுக்கடி: மநீம வரவேற்பு

சென்னை: கோகுல் ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, சாதி ஆணவத்திற்கு எதிரான சவுக்கடியான தீர்ப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்றுள்ளது. டந்த 2015-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநரான அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. … Read more

சேலம்: கைது செய்தபோது தப்பியோடி பள்ளத்தில் விழுந்த இருவருக்கு கால்முறிவு- போலீஸ்

சேலத்தில் ஆள்கடத்தல், வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் துரத்தி பிடிக்க முயன்றபோது பள்ளத்தில் விழுந்து இரண்டு பேருக்கு கால்முறிவு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரை கடத்திய கொள்ளை கும்பல், அவரிடமிருந்து ரூ. 41 ஆயிரம் பணம், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாக அவர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோன்று கடந்த 7ஆம் தேதி சொகுசு காரில் வந்த ஐந்து பேர் தனபால் என்பவரை வழிமறித்து ரூ. … Read more

வீட்டு மனைகள் குடும்பத் தலைவி பெயரிலே வழங்கப்படும்; மகளிர் தினத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu CM MK Stalin says women family heads will be beneficiaries in housing plan: இனிமேல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீட்டு மனைகள் குடும்பத் தலைவிகள் பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். நேற்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில், திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், … Read more