விடிய விடிய உல்லாசம் விடிந்தபின் தப்பியோடிய காதலன்..போலீசார் அதிரடி நடவடிக்கை.!

காதலியுடன் ஊரை விட்டு ஓடிய வாலிபர் ஒருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அனாதையாக விட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளார். மதுரை மேலூர் பகுதியில் வசிக்கும் 18 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் 26 வயதான வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வாலிபரின் வீட்டில் கடந்த பிப்ரவரி 14 ஆம் … Read more

வாணியம்பாடியில் சாராயம் விற்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்.. சாராயக் கொட்டகை தீ வைத்து எரிப்பு.! <!– வாணியம்பாடியில் சாராயம் விற்பது தொடர்பாக இரு தரப்பினரிடைய… –>

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாராயம் விற்பது தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் சாராயக் கொட்டகை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது . நேதாஜி நகரில் தொடர்ந்து சாராயம் விற்று வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி இளைஞர்கள் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில், சாராய வியாபாரிகள் அடியாட்களை கொண்டு புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்த து.இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் சாராய வியாபாரியின் கொட்டகையை தீயிட்டுக் கொளுத்தி சாலைமறியலில் … Read more

நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல்

தூத்துக்குடி: இந்தியாவிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். துறைமுக நகரமான தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூ.1,000 கோடியில் 1,150 ஏக்கர்பரப்பளவில் ‘சர்வதேச அறைகலன் பூங்கா’ (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பர்னிச்சர் பூங்கா அமைக்க சிப்காட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் … Read more

திருச்சி: இருசக்கர வாகனத்தின் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து

சமயபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெய்குப்பை ஊராட்சியில் உள்ள காமராஜர் காலனியில் வசிப்பவர்கள் மலர்மன்னன் என்பவரின் மகன் கரன் (18). செல்வராஜ் என்பவரின் மகன் வெற்றிவேல் (28), மூக்கன் என்பவரின் மகன் முரளி (17) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சமயபுரம் கூத்தூர் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கூத்தூர் பிரிவு சாலையை கடக்க … Read more

உள்ளாட்சியில் சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை உறுதி: ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சியில் சிறு தவறு நடந்தாலும், நடவடிக்கை எடுப்பது உறுதி என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்தக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தமிழக உள்ளாட்சி தேர்தலில். இதுவரை கழகம் கண்டிராத சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். அந்த வெற்றியை பெற்ற பிறகு என்னுடைய முதல் சுற்றுப்பயணம் இது. உள்ளாட்சியிலே இன்று மேயர்களாக, துணை மேயர்களாக … Read more

டாஸ்மாக் மேலாளர்களுக்கு அதிரடி உத்தரவு.. இன்று முதல் அமல்.!!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து மதுபானங்களில் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தை தொடர்ந்து புதுசேரியிலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு வாணிபகழகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விலை உயர்வு … Read more

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு <!– டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு –>

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10ரூபாயும், உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாய் வரையும்  உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு  மதுவகைகள் மூலம் 10 கோடியே 35 லட்சம் ரூபாயும், பீர் வகைகள் மூலம் ஒரு கோடியே 76லட்சம் ரூபாயும் கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4ஆயிரத்து 396 கோடி ரூபாய் … Read more

மேகேதாட்டு அணை விவகாரத்தை அரசியலாக்குவது விவசாயிகளுக்கு நன்மையை தராது: அண்ணாமலை கருத்து

சென்னை: மேகதாட்டு அணை விவகாரத்தை அரசியலாக்குவது விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக பாஜகவை கண்டித்து அறிக்கை கொடுத்திருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஏன் கண்டிக்கவில்லை? தொடக்கத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட கிளம்பியதே அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சிதானே. கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சிகள் அந்த மாநில நலனுக்கு மாறுபாடாக … Read more

மகளின் திருமணத்திற்குச் சென்று திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். புதுக்கோட்டை பெரியார் நகர் இரட்டை ரோட்டில் வசிப்பவர் மனோன்மணி. இவர் தனது கணவர் சின்னதுரையை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மனோன்மணியின் மகள் வெண்ணிலாவின் திருமணத்திற்காக கனடாவில் மருத்துவராக பணி புரியும் தனது மகன் பாரதிராஜா மற்றும் குடும்பத்தினருடன் காரைக்குடிக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மனோன்மணி குடும்பத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு … Read more