#IPL2022 || சென்னை அணி மோதவுள்ள அணிகள், நாள் முழு விவரம்.!

வரும் 26ம் தேதி தொடங்க உள்ள 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.  அதன்படி, மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  மேலும், சென்னை அணி மோதவுள்ள … Read more

72 ஏக்கர் பரப்பளவில் ராம்கோ சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் <!– 72 ஏக்கர் பரப்பளவில் ராம்கோ சுற்றுச்சூழல் பூங்காவை திறந்த… –>

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 72 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால்  5 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் வேம்பு, புங்கம், அத்தி, நாவல், வில்வம், வாகை, நித்திய கல்யாணி போன்ற சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மரங்கன்றுகள் மற்றும் புதர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. … Read more

புதுச்சேரியிலிருந்து உக்ரைனுக்கு படிக்கச் சென்றோரில் 14 பேர் திரும்பினர்;மீதமுள்ள 8 பேரையும் மீட்க நடவடிக்கை: முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்றோரில் 14 பேர் பத்திரமாக திரும்பி வந்துள்ளனர். டெல்லிக்கு ஐவர் வந்தடைந்துள்ளனர் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மீதமுள்ள 8 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: “உக்ரைன் நாட்டில் படிக்க சென்ற மாணவர்கள் நடைபெறும் போரின் காரணமாக நம்முடைய நாட்டுக்கு திரும்ப நடவடிக்கையை மத்திய அரசு சரியான முறையில் சிறப்பாக எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரியைச் சேர்ந்த 27 மாணவர்கள் … Read more

ப்ரமோவில் வர சீன கடைசில போடுறீயே நியாயமா? இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : தமிழ் ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதை பயன்படுத்திக்கொள்ளும் டிவி சேனல்கள் அடிக்கடி புதிய சீரியல்களை களமிறக்குவதும், சீரியல் நேரங்களை மாற்றம் செய்வதும் என பல செயல்களில் ஈடுபட்டு வருகினறனர் இதில் உன்னிப்பாக கவனித்தால் ஏறக்குறைய அனைத்து சீரியல்களின் கதைக்கருவும் ஒன்றாகத்தான் இருக்கும். பழைய கதைதான் என்றாலும் பல சீரியல்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில்இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. … Read more

நாட்டாமை மாற்றுவது தொடர்பாக தகராறு.. சொந்த தம்பியை கொலை செய்த அண்ணன்..!

சொந்த தம்பியை அண்ணன் மற்றும் அவரது மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் , சிவனாரகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . இவர் அந்த கிராமத்தின் நாட்டாமையாக இருந்து வருகிறார். அவரது அண்னன் பாண்டியன் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் நாட்டாண்மையை மாற்றாதது தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில் வடக்குமலையான் கோயில் கட்டுவது தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவதன்று, பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ் … Read more

எல்லையில் தடுத்து நிறுத்தினார்கள்.. வானை நோக்கி சுட்டு பயமுறுத்தினர்.. தமிழக மாணவரின் உக்ரைன் அனுபவம் <!– எல்லையில் தடுத்து நிறுத்தினார்கள்.. வானை நோக்கி சுட்டு பய… –>

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர், அங்கு உக்ரைன் ராணுவம் தங்களை எல்லையில் தடுத்து நிறுத்தி மிரட்டியதாகவும், வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி பயமுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனில் வெடிகுண்டு சத்தத்திற்கு மத்தியிலும், கடுங்குளிருக்கு மத்தியிலும் மரண பயத்துடன் சிக்கிய தமிழக மாணவர்கள் தாயகத்திற்கு வந்து குடும்பத்தினரையும், சொந்த பந்தத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அந்த பதுங்கு குழிக்குள் பதுங்கியிருந்த பின்னர் துதரகம் மூலம் ருமேனியா எல்லை வழியாக தாயகம் திரும்ப நடவடிக்கை … Read more

வாகன உரிமையாளர் உயிரிழந்தால் எளிதாக பெயர் மாற்றம்: ஆர்டிஓ பதிவில் வாரிசை தெரிவிக்கும் வசதி அறிமுகம்

கோவை: வாகனத்தின் உரிமையாளர் உயிரிழந்துவிட்டால் எளிதாக பெயர் மாற்றும் வகையில் வாகன பதிவின்போதே நாமினியை தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு வாகனத்தின் உரிமையாளர் திடீரென இறந்துவிட்டால், இறந்தவரின் இறப்புச் சான்று, வாரிசு சான்று ஆகியவற்றைப் பெற்று, வாரிசுகள் அனைவரும் தொடர்புடைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு (ஆர்டிஓ) நேரில் சென்று கையெழுத்திட வேண்டும். பின்பு, யாராவது ஒருவரின் பெயருக்கு மாற்ற எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்த பிறகே உரிமையாளரின் பெயரை மாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த … Read more

தமிழகத்தில் வரும் 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை? – வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன்காரணமாக, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் ஓரிரு … Read more