திருமானூர் ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 250 மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட திருமானூர் ஜல்லிக்கட்டு போட்டி, 500 காளைகள், 250 மாடுபிடி வீரர்களுடன் இன்று நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5 ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 9 மணி அளவில் எம்எல்ஏ சின்னப்பா, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் … Read more

சென்னை மேயர் அணியும் அங்கி, தங்கச்சங்கிலியின் பின்னணி

சென்னை மாநகராட்சி மேயருக்கு வழங்கப்படும் அங்கி, செங்கோல், தங்கச்சங்கிலி ஆகியவை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மாநகராட்சிகளில் முதன்மையானது சென்னை மாநகராட்சி. சென்னை மாநகராட்சியின் மேயருக்கு வழங்கப்படும் அங்கி, செங்கோல், தங்கச்சங்கிலி ஆகியவற்றின் பின்னணி சுவாரஸ்யமானது. சென்னை மேயர் இரண்டு நிறங்களில் அங்கி அணிவார். ஒன்று சிவப்பு நிறம் மற்றொன்று கருப்பு நிறம். பதவி ஏற்பு விழா, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் நிகழ்ச்சி, குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் போன்றோர் பங்குபெறும் … Read more

Russia Ukraine Crisis Live: உக்ரைன் மீது 500க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவிய ரஷ்யா.. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தவகவல்!

Go to Live Updates Ukraine News: உக்ரைன் வான்வெளி எல்லையை மூடுமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேலும் குண்டுவீச’ ரஷ்யாவுக்கு நேட்டோ’ பச்சைக்கொடி காட்டியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து ஆலோசனை! உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக, தமிழக அரசு அமைத்த சிறப்பு குழு இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறது. உக்ரைனில் உள்ள … Read more

மோட்டார் வாகன சட்ட விதிகளை கடுமையாக பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிறுவர்கள் வாகனம் ஓட்டாமல் இருப்பதையும், மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை தி. நகர் நடேசன் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச்  சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட விபத்தில் கை, கால், முகம் என உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றார்.  விபத்தால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனுக்கு இழப்பீடு … Read more

300 கி.மீ தொலைவில் தமிழகத்தை நோக்கி நகரும் புதிய புயல் சின்னம்.? <!– 300 கி.மீ தொலைவில் தமிழகத்தை நோக்கி நகரும் புதிய புயல் சி… –>

  வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை ஐந்தரை மணி நிலவரப்படி நாகப்பட்டினத்துக்குக் கிழக்கு வடகிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. … Read more

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் அரசியல் ஆதாயம் தேடும் தமிழக அரசு: பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

சென்னை: உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும்விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காகவே எம்.பி., எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். வானொலியில் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) உரைகளை தொகுத்து, தமிழில் ‘மனதின் குரல்’ என்ற பெயரிலேயே 5 தொகுதி நூலை செந்தில் பதிப்பகம் உருவாக்கியுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடந்து வரும் புத்தகக் காட்சியில் நேற்று நடைபெற்றது. நூலை … Read more

"மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம்" – பழனிவேல் தியாகராஜன்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஆங்கில ஊடகம் சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு தெரிவித்தார். மத்திய அரசின் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குவதாகவும் கூறினார். … Read more

சசிகலாவுடன் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா சந்திப்பு

OPS Brother Meet V K Sasikala IN Tiruchandur : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து கட்சியில் சசிகலாவுக்கு உண்டான ஆதரவு பெருகி வரும் நிலையில், திருச்செந்தூரில் இன்று ஒபிஎஸ் தம்பி ஒ ராஜா சசிகலாவை நேரில் சந்தித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிலதா இறந்ததில் இருந்து அதிமுகவில், ஒபிஎஸ் இபிஎஸ் ஒரு அணியிலும் சசிகலா தனி அணியிலும், இருந்து வரும் நிலையில், இவர்களுக்குள் வெளிப்படையான மோதல் இருந்து வருகிறது. மேலும் அதிமுகவின் … Read more