கூட்டணி அறம் காத்துள்ளார் முதல்வர் – திருமாவளவன்

கூட்டணி அறத்தை காக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை திமுக ஏற்றதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைமைப்பொறுப்புக்கான தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை உணர்ச்சிப்பூர்வமாகவும் முதிர்ச்சி நிறைந்ததாகவும் இருந்ததாக திருமாவளவன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். சில இடங்களில் நடந்த அத்துமீறல்களுக்கு திமுக தலைமை காரணமில்லை என்றபோதும் அதனை சீர்செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து முதல்வர் ஆற்றியுள்ள எதிர்வினை … Read more

Rasi Palan 05th March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 05th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 05th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 05ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

திடீர் திருப்பம்.. திமுக நகராட்சி துணைத் தலைவர் ராஜினாமா.!!

நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனால் கூட்டணி கட்சியினர் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு … Read more

மறைமுகத் தேர்தலில் அரங்கேறிய களேபரங்கள்.! <!– மறைமுகத் தேர்தலில் அரங்கேறிய களேபரங்கள்.! –>

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பல இடங்களில் கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாலை மறியல், வாக்குவாதம், தள்ளுமுள்ளு உள்ளிட்ட நிகழ்வுகளும் அரங்கேறின… மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் மன்றத் தலைவர் பதவிக்கு செல்வி என்பவரை திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரும் மனுத்தாக்கல் செய்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறைமுகத் தேர்தலில் சகுந்தலா 17 வாக்குகள் … Read more

ரூ.564 கோடி மோசடி; பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகி கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: ரூ.564 கோடி மோசடி செய்த தாக பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகி அகமது ஏ.ஆர் புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் பண மோசடி செய்ததாக கடந்த 2018-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட … Read more

இம்யூனிட்டி… தினசரி உணவில் கிராம்பு, கருப்பு மிளகு இப்படி சேர்த்து சாப்பிடுங்க!

Tamil Health Update : நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியான விகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைய குறைய தொற்று நோய் தாக்கம் அதிகரித்து மரணத்தை தழுவும் நிலை ஏற்படும். இந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். உணவு மட்டுமல்லாது சமையலுக்கு பயன்படுத்தும் சில மசாலா பொருட்களை கொண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இந்த … Read more

பால் விலை குறைப்பை ஈடுசெய்ய பால் உபயோக பொருட்களின் விலையை கூட்டுவதா?..ஓபிஎஸ் கண்டனம்.!

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தயிர், நெய், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.  அதன்படி, அரை லிட்டர் தயிர் ரூ.27ல் இருந்து ரூ.30ஆகவும், 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த … Read more

திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை வென்ற கணவன், மனைவி.! <!– திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை வ… –>

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு கணவன், மனைவி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கவிதா பாண்டியனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நகராட்சியின் துணைத் தலைவர் இடம் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் யாரும் போட்டியிட முன்வராததால் கவிதா பாண்டியனின் கணவர், ஆர்.எஸ்.பாண்டியன் திமுக சார்பில் … Read more