'தி மயிலாப்பூர் கிளப்'-புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கான வாடகை பாக்கியை செலுத்தவில்லை எனக் கூறி, ‘தி மயிலாப்பூர் கிளப்’புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 24 கிரவுண்ட் நிலத்தை ‘தி மயிலாப்பூர் கிளப்’ குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த நிலத்துக்கு 3 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, அத்தொகையை செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் … Read more

அதிமுகவில் திருப்பம்? – சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு

வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் வி.கே.சசிகலா இரண்டு நாட்கள் ஆன்மிக பயணமாக தென்மாவட்டங்களுக்கு செல்வதாக அறிவித்திருந்தார். இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் ஆன்மிக பயணம் செல்வதாகவும், தொண்டர்களை மட்டுமே சந்திக்கவிருப்பதாகவும், எந்தவொரு ஆலோசனைக் கூட்டமோ, கட்சி சார்ந்த அலுவல் கூட்டமோ இல்லை என அறிவித்திருந்தார். ஆனால், இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்றிருந்த சசிகலாவை திருச்செந்தூரில் ஓபிஎஸ்-இன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசிவருகிறார். இந்த சந்திப்பு குறித்து … Read more

`இனி அனுமதியில்லாமல் சி.பி.ஐ விசாரிக்க முடியாது!’ – பொது ஒப்புதலை ரத்து செய்த மேகாலயா

சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த பொது ஒப்புதலை மேகாலயா அரசு ரத்து செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் 9 ஆவது மாநிலம் மேகாலயா ஆகும். இந்த நடவடிக்கை, கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் எடுக்கப்பட்டுள்ளது. மிசோரம் தவிர, சிபிஐக்கான ஒப்புதலை திரும்பப் பெற்ற மற்ற அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், சிபிஐக்கான பொது … Read more

கோவை மேயர் முதல் நாள்.. முதல் கையெழுத்து.. பொதுமக்கள் பாராட்டு.!

கோவை மேயராக இன்று கல்பனா ஆனந்த்குமார் பதவியேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் நேற்று வார்டு கவுன்சிலர் பதவி ஏற்ற நிலையில், இன்று மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை … Read more

முதன்முறையாக மணப்பாறை நகரமன்றத் தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக.! <!– முதன்முறையாக மணப்பாறை நகரமன்றத் தலைவர் பதவியை கைப்பற்றிய … –>

திருச்சி மாவட்டம் மணப்பாறை, நகராட்சியாக மாறிய 56 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக அந்நகராட்சியின் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 11 இடங்களிலும் சரிசமமாக வென்றன. எஞ்சிய 5 வார்டுகளில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடனே மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டுமென்ற சூழலில்,  மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுதா பாஸ்கரன் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக … Read more

அதிமுக ஆதரவுடன் பதவியைக் கைப்பற்ற முயன்ற திமுக பெண் கவுன்சிலர் – மோதல் வெடித்ததால் உதயேந்திரம் பேரூராட்சியில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பத்தூர்: உதயேந்திரம் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற கவுன்சிலர், அதிமுக ஆதரவுடன் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற முயன்றதால் கவுன்சிலர்களிடையே இன்று திடீர் மோதல் ஏற்பட்டு பேரூராட்சி அலுவலகம் போர்க்களமாக மாறியது. இதைதொடர்ந்து, மறு தேதி அறிவிக்கப்படும் வரை மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக செயல் அலுவலர் குருசாமி அறிவித்தார். இதைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டமும், திமுக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், … Read more

“முதலில் எம்.ஜி.ஆர் படத்தை போஸ்டரில் பெருசா போடுங்க!”-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 3-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘இன்றைய அதிமுகவுக்கு சசிகலாவின் தேவை… அவசியமா? இல்லையா?’ எனக் கேட்டிருந்தோம். இதற்கு வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை … Read more

உடற்பயிற்சியை எந்த வயதிலிருந்து செய்யத் தொடங்கலாம்?

உடற்பயிற்சியை எந்த வயதிலிருந்து செய்யத் தொடங்கலாம் என்பது பலருக்கு இருக்கும் சந்தேகம். அந்த சந்தேகததை பிரபல ஜிம்மில் உடற்பயிற்சி நிபுணராக பணிபுரிந்து வரும் திரு. சதீஷ் அவர்களிடம் முன்வைத்தோம். இனி அவரது வார்த்தைகளிலிருந்து.. உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. எந்த மாதிரியான உடற்பயிற்சியை செய்கிறோம் என்பதே முக்கியம். நமது உடல் நல்ல முறையில் இயங்க வேண்டுமென்றால் அதற்கு நாம் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றால் அதிக எடையை தூக்க … Read more