ஓம் நமச்சிவாய, ஜெய் பீம், பெரியார்… சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பில் வெடித்த முழக்கங்கள்!

Chennai corporation councilors oath taking ceremony incidents: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, சிங்கார வேலர் வாழ்க, எம்ஜிஆர் பாடல் என பல்வேறு முழுக்கங்களுடன் பதவியேற்றனர். தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்து முடிந்த, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிகளில் மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி ஆணையர்களும், நகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் செயல் … Read more

பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்.!

திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் ஒருவர் பொறுப்பேற்ற அடுத்த நொடியே திமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் 8-வார்டுகளையும், திமுக 6 வார்டுகளையும், அதிமுக 1 வார்டையும் கைப்பற்றினர். இந்த நிலையில் 15 வார்டுகளை சேர்ந்த வேட்பாளர்களும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் 14 வது வார்டில் வெற்றி … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது <!– பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த ஆசிரியர் போக்சோ சட்ட… –>

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விருத்தாசலம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியொன்றில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில், மாணவி பயிலும் பள்ளியிலுள்ள விலங்கியல் ஆசிரியர் சாமிநாதன் என்பவர் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து  ஆசிரியரை போலீசார் … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதுஅடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம்… இவ்ளோ மேஜிக் இருக்கு!

Skin care, Digestion and other Health benefits of Fenugreek in Tamil: நமது சமையல் அறைகளில் கிடைக்க கூடிய சில எளிய பொருட்கள் சிறந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. நாம் அவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து, உட்கொண்டு வந்தாலும், அவற்றை தனியாக எடுத்துக் கொள்ளும்போதோ அல்லது அந்த பொருட்களை பிரதானமாக கொண்டு செய்யப்படும் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் முழுப்பயனும் நமக்கு கிடைப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளும் தீர்கிறது. அப்படியான சமையலறை உணவுப் பொருட்களில் … Read more

முன்கூட்டியே கூட்டுறவு நிறுவனங்களுக்கு பணத்தை வழங்காத திமுக அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம்.!!

நகைக் கடன் தள்ளுபடிக்கான பணத்தை முன்கூட்டியே கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்காத தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்ட னம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அளிக்கையில், “கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று பொத்தாம் பொதுவாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடன் தள்ளுபடி கேட்டு விண்ண ப்பித்த கிட்டத்தட்ட 49 இலட்சம் நபர்களில், வெறும் 13 இலட்சம் நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி … Read more

வருகிற 5-ந் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.. <!– வருகிற 5-ந் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.. –>

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மார்ச் மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்தும், அந்தந்த துறைகளுக்கான கோரிக்கைகள், நிதி ஒதுக்கீடு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட … Read more

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை: அரசு துணைச் செயலாளர் ஆய்வு

புதுக்கோட்டை: நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைப்பது குறித்து அரசு துணைச் செயலாளர் இன்று (மார்ச் 2) ஆய்வு செய்தார். முத்துலட்சுமி ரெட்டிக்கு அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநரும், அரசு துணை செயலாளருமான வீ.ப.ஜெயசீலன் ஆய்வு … Read more