அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – ஓபிஎஸ்-யை நேரில் சந்தித்த நிர்வாகிகள் – தேனி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு.! 

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, தேனி மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று, தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். கட்சிக்குள் பிளவு உள்ளது தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார். மேலும், தொண்டர்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி … Read more

மார்ச் 7 முதல் உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி விசாரணை நிறுத்தம் – தலைமை நீதிபதி <!– மார்ச் 7 முதல் உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி விசாரணை ந… –>

சென்னை உயர்நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளும் விசாரணையை வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை நடத்தப்படுகிறது. காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு துண்டிப்பு உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. எனவே உண்மையில் காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் … Read more

'மாணவர்களை கேள்வி கேட்க பாஜகவுக்கு இதுவா நேரம்?' – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு

சென்னை: “உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதனை … Read more

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பத்ர தீப விழா கொண்டாட்டம்!

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பத்ர தீப விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் முழுவதும் 10 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டு விளக்கொளியில் கோவில் ஜொலித்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பத்ர தீப திருவிழா கடந்த … Read more

வாவ்… கொரோனாவை ஒழிக்கும் வேப்ப மரச் சாறு: இந்திய ஆய்வு முடிவு அறிவிப்பு

Indian research finds Neem tree based drugs may fight against corona: வேப்பமர பட்டைச் சாறு கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும் என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை அழிக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தற்போது கொரோனா வைரஸூக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கொரோனா வைரஸ் பற்றியும், … Read more

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லையா? தமிழக அரசு புதிய உத்தரவு.!

நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைதாரரின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போலி ரேஷன் அட்டைகளை களையும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பல புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், குடும்ப அட்டைதாரர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கவில்லை என்றால், பணியாளர்கள் அந்த குடும்ப … Read more

இடுப்பில் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்.! <!– இடுப்பில் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞ… –>

சென்னை காவல் ஆணையர் அலுவலக வாயில் அருகே இடுப்பில் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் இருந்த டிபன்பாக்ஸ் கீழே விழுந்ததால் அதனை எடுக்க முயன்ற போது அவரது இடுப்பில் பட்டா கத்தி ஒன்று மறைத்து வைத்திருந்ததை பார்த்த காவலர்கள் உடனே அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் பெரம்பூர் பேரக்ஸ் சாலை கேஎம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் … Read more

வியக்கவைத்த வேலூர் – மயான கொள்ளை திருவிழாவில் பல வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த திருவிழா, பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவை யொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், … Read more

'நெருப்பில்லா சமையல்' – பாளையங்கோட்டை கல்லூரியில் வினோத போட்டி – மாணவிகள் அசத்தல்!

மகளிர் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் நெருப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, நெருப்பில்லா சமையல் என்ற போட்டி நடத்தப்பட்டது இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள் துறை வாரியாக பிரிந்து, நெருப்பில்லாமல் இயற்கை முறையிலான உணவுப் பொருட்களை தயார் … Read more

ஆயுதம் இருக்கிறதா என கண்டறியவே சட்டையை கழற்ற வைத்தோம்: ஐகோர்ட்டில் ஜெயக்குமார் பதில்

கள்ள ஓட்டுபோட முயன்றபோது பிடிபட்ட நபர், ஆயுதம் மறைத்து வைத்திருக்கிறாரா என்று கண்டறிவதற்காகவே அவருடைய சட்டையை கழற்ற வைக்கப்பட்டதாகவும் அந்த சட்டை கைகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்டதாகவும் பின்னர் அந்த நபர் சட்டை இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்று பிடிபட்ட அந்த நபர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளதால் அவர் கடுமையான குற்றவாளி என்பதாலும், இடுப்பில் … Read more