போட்டிபோட்டுக் கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டி வந்த 6 பேர்.. கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சிகள்.. <!– போட்டிபோட்டுக் கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டி வந்த 6 பேர்.. … –>

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள், சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சாயல்குடி – கமுதி சாலையில் இளைஞர்கள் 6 பேர் நான்கு பைக்குகளில் வந்து கொண்டிருந்தனர். யார் முதலில் வேகமாக செல்வது என போட்டிப்போட்டுக் கொண்டு அவர்கள் அதிவேகமாக வந்த நிலையில், வளைவில் திரும்பும் போது இரண்டு பைக்குகள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கம்பத்தில் மீது மோதியது. … Read more

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டுப் பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினரான கிஷோர்குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கான தேர்தல் உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிக்க … Read more

பரபரப்பாக ஹெல்மெட் அணிந்து வந்து பதவியேற்ற கவுன்சிலர்கள்: காரணம் இதுதான்

ஹெல்மெட் அணிந்து வந்து பதவியேற்ற கவுன்சிலர்கள் அடுத்த சில நிமிடங்களில் டெம்போ ட்ராவலர் வேனில் மின்னல் வேகத்தில் பறந்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக 10 உறுப்பினர்களை பெற்று தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. திமுகவினர் கடும் முயற்சி செய்து அதனை தடுக்க முயன்று வருவதாக அதிமுக தரப்பினர் புகார் கூறுகின்றனர். பதவியேற்க வந்தால் அதிமுக உறுப்பினர்களின் மண்டையை உடைப்போம் என மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் பாதுகாப்பு கருதி ஹெல்மட் அணிந்து வந்த கவுன்சிலர்கள் அவசர அவசரமாக … Read more

ராஜேந்திர பாலாஜிக்கு செம பதிலடி: அ.தி.மு.க கவுன்சிலர்களை கொத்தாக அள்ளிய தி.மு.க அமைச்சர்கள்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பிரதிநிதிகள் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், சிவகாசி நகராட்சியில் வெற்றிபெற்ற 11 அதிமுக கவுன்சிலர்களில் 9 பேர் திமுகவில் இணைந்தது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில், கவுன்சிலர்கள் மட்டுமின்றி அதிமுக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். சிவகாசி, திருத்தங்கல் ஆகியவற்றை இணைத்து சிவகாசி மாநகராட்சி … Read more

முன்னாள் காதலியுடன் பேசிய இளைஞர்.. காதலன் வெறிசெயல்.. காவல்துறை தீவிர விசாரணை..!

முன்னாள் காதலியுடன் பேசியவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.  இந்நிலையில், அவர் காதலித்து வந்த பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த இந்து வாலிபர் பேசி பழகி வந்துள்ளார். இது பாலுவுக்கு பிடிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் அரசு அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்ததாக … Read more

தொழிலதிபர் ஏ.வி.சாரதிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை <!– தொழிலதிபர் ஏ.வி.சாரதிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்… –>

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், கல்குவாரி தொழிலதிபரான ஏ.வி.சாரதியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், ஆற்காடு, சென்னை என மொத்தம் 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆற்காட்டில் ஏ.வி.சாரதியின் வீடு, அவருக்கு சொந்தமான கல்குவாரி, அலுவலகங்கள் மற்றும் சென்னை பெரியமேட்டிலுள்ள அவரது வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வந்து, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வர்த்தக … Read more

’கலைஞர், தளபதி, செந்தில்பாலாஜி அறிய…’ – கோவையில் பதவியேற்ற திமுக கவுன்சிலர்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட திமுக கவுன்சிலர்கள், ‘கலைஞர் அறிய’, ‘தளபதி அறிய’, ‘அமைச்சர் செந்தில்பாலாஜி அறிய’ என்று கூறி, பதவியேற்றுக் கொண்டனர். கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பேரூராட்சியில் 9 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 802 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர், … Read more

திருவேற்காடு நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

திருவேற்காடு நகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். திருவேற்காடு நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 11, காங்கிரஸ் 1, சுயேட்சைகள் 6 பேர் என மொத்தம் 18 பேர்வெற்றி பெற்றனர். இவர்கள் திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் 18 பேரும் இன்று நகர்மன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது முழுமையான பெயரை கூறி பதவியேற்றுக் கொண்டனர். … Read more

Russia Ukraine Crisis Live: பெலாரஸில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?

Go to Live Updates Ukraine News: கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 10% அதிகரிப்பு! ரஷ்ய – உக்ரைன் போரால், கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 10% அதிகரித்தது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 106 அமெரிக்க டாலரை தாண்டியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம். ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை நிறுத்தம்! உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு ‘ஆப்பிள்’ நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவில் … Read more

திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த கவுன்சிலர்.. மீண்டும் ஒலிக்க தொடங்கிய முக அழகிரியின் பெயர்.!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.  7 வார்டுகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று … Read more