அதிமுக கவுன்சிலர்கள் மூவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

சென்னை: திமுகவினரை தாக்கியதாக, கோவை வெள்ளலூர் பேரூராட்சியைச் சேர்ந்த 3 அதிமுக கவுன்சிலர்களை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 15 வார்டுகளில் 8 வார்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. அந்த வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலத்தின்போது, திமுக பிரமுகரையும், அவரது சகோதரரையும் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அதிமுக கவுன்சிலர்கள் சந்திரகுமார், கருணாகரன், … Read more

கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானதா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது உக்ரைன் விவகாரம், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வெளியுறவுத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் அதனை கண்காணித்து வருகிறார். பிரதமர் மோடி கிட்டத்தட்ட 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். உக்ரைன் ஒரு பெரிய நாடு. உக்ரைனின் மேற்கு பகுதியில் யுத்தம் அதிக அளவில் இல்லை. அதனால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெரிய அளவில் … Read more

கொலை செய்து விளையாட நினைக்கிறார்களா? ஸ்டாலினுக்கு அதிரடி கேள்வி எழுப்பிய ‘அறப்போர்’

Tamilnadu CM Stalin Birthday : தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில். அவருக்கு வாழ்த்து தெரிவித்த அறப்போர் இயக்கத்தில் ஜெயராமன் வெங்கடேன் கூடவே விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளை விமர்சையாக கொண்டாடி வரும் திமுகவினர், ஸ்டாலின் கட்டவுட், பட்டாசு பொதுமக்களுக்கு இனிப்பு என வெகு சிறப்பான முறையில் கொண்டாடி வருகினறனர். மேலும் முதல்வர் … Read more

ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த  கர்நாடக மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.!

உக்ரைன் போரில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழப்புக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  “உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார் என்பதை அறிந்து வேதனையடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1.உக்ரைன் கார்கிவ் … Read more

அரியலூரில் லாரி ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வந்ததால் அரசு பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..! <!– அரியலூரில் லாரி ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வந்ததால் அ… –>

அரியலூர் மாவட்டத்தில் செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுநர் லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படும் நிலையில், எதிரே வந்த அரசு பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர். அரியலூரில் இருந்து வேணாநல்லூர் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்து, காட்டுபிரிங்கியம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் எதிரே அரியலூர் நோக்கி சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்துக்கொண்டிருந்த டிப்பர் லாரி , திடீரென அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் … Read more

வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையை அழைத்து வந்து அரவணைத்த குடும்பத்தினர்: ஊரே வியக்க விழா நடத்திய நெகிழ்ச்சி!

கடலூர்: விருத்தாசலத்தில் திருநங்கை ஒருவருக்கும் அவரது குடும்பத்தினரே மஞ்சள் நீராட்டு விழா நடத்தி கொண்டாடியுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறிய அவரை, அழைத்து வந்து அவரது உணர்வுக்கு மதிப்பளித்த குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருநங்கைகள் (ஆணுக்கான அடையாளத்துடன் பிறக்கும் இவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தங்களை பெண்ணாக உணர்பவர்கள்) பெரும்பாலானோர் அவர்கள் குடும்பத்தை விட்டு விலகி, மூத்த திருநங்கைளிடம் தஞ்சமடைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் குடும்ப விபரத்தைக் கூட யாரிடமும் தெரிவிப்பதில்லை. அதேபோன்று … Read more

TET தேர்வில் வென்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் – 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் மறுநியமனத் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் TET தேர்வுக்கான வயது வரம்பை 58ஆக உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆவது நாளாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். போராட்டத்தின் போது இரண்டு பெண்கள் மயங்கிவிழுந்தது போராட்டக்காரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

High court order to police to provide security to ADMK councillors: மதுரை மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் … Read more

குடும்பத்தினர் கண் முன்னே தந்தை மகனுக்கு நிகழ்ந்த கொடூரம்.. சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்..!

குடும்பத்தினர் கண்முன்னே  தந்தை மகன் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் தனது குடும்பத்தினருடன் நாகூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.  அப்போது நாகூர் தர்காவில் வழிபாடு முடித்து விட்டு அங்கு உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு  அவரும் அவரது மகன் முகம்மது எனும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி … Read more