முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, … Read more

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை அகற்றக் கோரி மாணவ மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள சத்திய மூலம் நகராட்சி பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 508 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள 11வகுப்பு அறையின் அருகில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் சாப்பிட வேண்டியுள்ளது. இந்நிலையில், இந்த கட்டடம் எந்த நேரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் மேற்கூரைகள் … Read more

ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா; தேஜஸ்வி வருகை பின்னணி

Tejashwi attend Stalin’s Book release event in Chennai: சென்னையில் நடைபெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தேஜஸ்வி யாதவ், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஷியாம் ரஜக் … Read more

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, 2.3.2022 தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி … Read more

ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை.. <!– ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் அட… –>

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தன் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் மறுநாளான சனிக்கிழமை அதே பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து … Read more

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் எட்டு பேர் கைது

ராமேசுவரம் மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைபிடித்து அதில் இருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைபிடித்தனர். அதில் இருந்த ரமேஷ் (40),ரோடிக்(18), … Read more

'வாகன கடனை கட்டவில்லை' தனியார் வங்கி ஊழியர்கள் செய்த அராஜகம்

கறம்பக்குடி அருகே வாகன தவணை தொகையை கட்டவில்லை என தாய் மகன் மீது தனியார் வங்கி ஊழியர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெத்தாரிகுளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மனைவி பராசக்தி. தர்பூசணி பழ வியாபாரம் செய்து வரும் பராசக்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி மூலம் கடன் பெற்று டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றை வாங்கி அதன் மூலம் பழ வியாபாரம் செய்து … Read more

இரவில் தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… இவ்வளவு நன்மை இருக்கு!

Medic benefits of cloves in tamil: இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக கிராம்பு உள்ளது. இது தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாக, நமது உடலில் மேஜிக் செய்கிறது. அறிவியல் ரீதியாக Syzygium aromaticum என அழைக்கப்படும் கிராம்பு, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, பல் வலி, தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற … Read more