பராமரிக்கப்படாத "ஏசி"யால் பற்றிய தீ.. கருகிப் போன 2 வயது குழந்தை.! <!– பராமரிக்கப்படாத &quot;ஏசி&quot;யால் பற்றிய தீ.. கருகிப் போன 2 வயது … –>

சென்னை பல்லாவரம் அருகே வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில், முறையாகப் பராமரிக்கப்படாத ஏசியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், ஏசி இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், அதன் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் யசோதா நகர் பகுதியில் வருபவர்கள் மோகன் … Read more

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, … Read more

உக்ரைன் மீது படையெடுப்பு: பின்லாந்து, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராவதை ரஷ்யா எதிர்ப்பது என்?

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியில், நோர்டிக் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்கள், படையெடுப்புடன் தொடர்புடையதாகவும் அதற்கு பதிலளிக்கும் விதமாகவும், பிராந்தியத்தில் மேலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் உறுப்பினர்களாக இருந்திருந்தால், இந்த நடவடிக்கை தீவிரமான ராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். உக்ரைனின் நிலைமை தொடர்பாக காணொலி வழியாக நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! டிராவில் முடிந்தது தமிழகம் சத்தீஷ்கர் இடையிலான ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம், சத்தீஷ்கர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி  தனது இரண்டாவது போட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபரரஜித் 166 ரன்களும், பாபா இந்திரஜித் 127 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் … Read more

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.! <!– விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந… –>

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். மண்குண்டாம்பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர் பட்டாசு தொழிற்சாலையில் சனிக்கிழமை வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்த 36 வயதான ராஜா, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், … Read more

சமூக நீதிப் பயணத்தின் முதற்கட்ட முயற்சிதான் சமூக நீதிக் கூட்டமைப்பு: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 

சென்னை: சமூகநீதிப் பயணத்தில் தமிழகத்தைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் இமாலய வெற்றியை , மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் … Read more

தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை பகிர்ந்த யோகி யார்? காட்டிக்கொடுத்த ஜியோடேக் புகைப்படம்

தேசியப் பங்குச்சந்தையின் (என்.எஸ்.இ) ரகசிய தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட, என்.எஸ்.இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை மார்ச் 6ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.இ) முன்னாள் குழு செயல் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியனின் சென்னை இல்லத்திலிருந்து வெறும் 13 மீட்டர் தொலைவில் உள்ள ஜியோடேக் செய்யப்பட்ட படங்கள், ஹிமாலயன் யோகி ஹோட்டல் முன்பதிவு செய்ததற்கு சுப்பிரமணியன் … Read more

வீடு புகுந்து பள்ளி மாணவியை கொலை செய்த நாடக காதலன்?! வேலூர் அருகே பெரும் பரபரப்பு.!

வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக காதலன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் நகர பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரும் இவரின் மனைவியும் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுவயதிலேயே இழந்த நிலையில், 16 வயதான மற்றொரு மகள் அதே பகுதியில் … Read more