கழட்டி விட்ட காதலியை போஸ்டர் அடித்து நாறடித்த நாம் தமிழர் தம்பி..! வாங்கிய 18 ஓட்டால் விரக்தி <!– கழட்டி விட்ட காதலியை போஸ்டர் அடித்து நாறடித்த நாம் தமிழர்… –>

நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை காதலித்த பெண்ணும் கைவிட்டுச் சென்றதால் , காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அந்தப்பெண் எழுதிய காதல் கடிதங்களையும் போஸ்டராக அச்சடித்து வீதி வீதியாக ஒட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்த ஜெயராஜ் என்பவருடைய மகன் விஜய்ரூபன். இவர் லவ்பேர்ட்ஸ் விற்பனை செய்யும்கடை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் … Read more

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்; இன்று மாலை 5 மணி வரை வழங்கல்

சென்னை: தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முன்னதாக, இன்றைய முகாமில் பொதுமக்கள் கட்டாயம் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 27-ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் … Read more

நம்புங்க… இங்கே மேயர் பதவிக்கு போட்டியே இல்லை: முத்து நகரில் முரட்டு பக்தர் குடும்ப கொடி!

த. வளவன் தமிழகத்தின் அனைத்து  மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கு மல்லுக்கட்டு நடக்கிறது. நெல்லை போல சில மாநகராட்சிகளில் கூவத்தூர் பாணியில் அடைகாக்கும் பணியும் தொடர்கிறது.  ஆனால் முத்து நகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் மட்டும்  எந்த அரவமும் இல்லை. மேயர் பதவிக்கு வெற்றிக்  கோட்டை தொட்ட திமுக  கவுன்சிலர்கலில் ஒருவரைத் தவிர யாருமே மேயர் கனவிலும்  இல்லை. அந்த பதவிக்கு எந்த போட்டியும் இல்லாமலேயே  ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரது தந்தையின் திமுக விசுவாசத்திற்கு கிடைத்த பரிசாகவும் இதைக் … Read more

சென்னையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்.. தமிழக முதல்வர் தொடக்கம்.!

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை ஒழிக்க இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக போலியோ நோய் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா முழுமைக்கும் … Read more

மார்ச் 1 – மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள்: இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு

சிவராத்திரியன்று சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை நேற்று வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி திருவிழா, மார்ச் 1-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.1-ம் தேதி மாலை முதல் 2-ம் தேதிவரை சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் … Read more

மறுபடியும் ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஜாலி டூர் கிளம்பிய பிரியங்கா கேங்!

Biggboss Priyanka Viral Video Travel Vlog : சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் பங்கேற்ற விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா மீண்டும் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் ஒரு இனிய பயணத்தை தொடங்கியுள்ளார்.இது தொடர்பான வீடியோ பதிவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன், கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி தொடங்கி சமீபத்தில் நிறைடைந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா கடைசிவரை பிக்பாஸ் … Read more

இனி இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது-உயர்நீதிமன்றம் உத்தரவு.!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கக்கோரி, அந்தப் பகுதியை சேர்ந்த, அருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை. சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்று அரசு … Read more

வேலூர் பாலாத்துவண்ணான் கிராமத்தில் எருது விடும் விழா: 10+ பார்வையாளர்கள் காயம்

வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த பாலாத்துவண்ணான் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட பாலாத்துவண்ணான் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்கும். ஒவ்வொரு காளையும் கண்டிப்பாக இரண்டு சுற்றுகள் விடப்படுகின்றன. இந்தப் போட்டியை நடத்துகின்ற … Read more