"வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது" -தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு <!– &quot;வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது&quot; -த… –>

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், வேளாண் … Read more

பிப்ரவரி 26: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,48,568 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.25 வரை பிப்.26 பிப்.25 … Read more

தமிழகம் முழுவதும் நாளை போலியோ முகாம்கள்

தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு, மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 500 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 1,647 முகாம்களில் சொட்டு மருந்து போடப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாம்களில் சொட்டு மருந்து போட … Read more

இந்தியாவிடம் ஆதரவு கேட்கும் உக்ரைன் : பிரதமர் அலுவலகம் கூறியது என்ன?

Ukrain Russia War Update : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடியை தொடர்புகொண்ட உக்ரைன் அதிபர் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC)  தங்கள் நாட்டிற்கு அரசியல் ஆதரவை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில்,, ரஷ்ய தாக்குதலை முறியடிக்கும் உக்ரைனின் போக்கு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். ரஷ்யாவின் 100,000 க்கும் மேற்பட்ட … Read more

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்! திங்கள்கிழமை நடத்தப்படும் என அறிவிப்பு.!

சென்னையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்று குறைந்து வருவதால், மக்கள் குறைதீர் கூட்டத்தை மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி, வரும் 28-ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் … Read more

ரூ.2.78 லட்சம் கொடுத்து 2 நாட்களுக்கு முன் வாங்கிய பைக்.. அதிவேகமாகச் சென்று விபத்தில் சிக்கி இளைஞர் பலி..! <!– ரூ.2.78 லட்சம் கொடுத்து 2 நாட்களுக்கு முன் வாங்கிய பைக்….. –>

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இரண்டே முக்கால் லட்ச ரூபாய்க்கு பைக்கை வாங்கி 2 நாட்களே ஆன நிலையில், ஆர்வக் கோளாறில் அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற அந்த மாணவர், கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தந்தையை இழந்த பிரசாந்த்தை ஒரே மகன் என்பதால் தாய் செல்லமாக வளர்த்து வந்துள்ளார். மகன் கேட்கிறானே என்று, 2 நாட்களுக்கு … Read more

பிப்ரவரி 26: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,48,568 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

"குடிக்க தண்ணீர் கூட இல்லை" – உக்ரைனில் உள்ள தமிழக மாணவி வேதனை

உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு உணவும், தண்ணீரும் கிடைக்காத சூழல் நிலவுவதாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஷைலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் அவர் தொலைபேசியில் கூறியதாவது: “உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்-இல் நாங்கள் தற்போது தங்கியுள்ளோம். இந்திய மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே தங்கியிருக்கிறோம். இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி எங்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதால் … Read more

ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக சஃபாரி உடையில் பெண் போலீஸ்: இந்த மாற்றம் ஏன்?

Tamilnadu Update : தமிழக அரசியல் வரலாற்றின் முதல்முறையாக முதல்வரின் பாதுகாப்புக்கு பெண் எஸ்ஐ தலைமையில் 7 பெண் காவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிகழ்வு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு பல்வேறு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கோவில் நிலம் மீட்பு, நீட் தேர்வு விலக்கு மசோதா என சுறுசுறுப்பாக இயங்கி வரும் முதல்வர் ஸ்டாலின் தற்போது முதல் முறையாக … Read more

போலியோ சொட்டு மருந்து முகாம்! தேனாம்பேட்டையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.!

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் நாளை காலை தொடங்கி வைக்கிறார். இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை ஒழிக்க இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக போலியோ நோய் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா முழுமைக்கும் உள்ள … Read more