ஆத்தூர் அருகே உலகிலேயே உயரமான முருகன் சிலை: ஏப்ரல் 6-ல் கும்பாபிஷேகம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இச்சிலையானது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த சிலை திறக்கப்பட்டால், இதுதான் உலகிலேயே பெரிய முருகன் சிலையாக இருக்கும். இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இதுகுறித்து … Read more

ராகுல் காந்தி வருகை அறிவிப்பு பிரஸ்மீட்டில் ரகளை: காங்கிரஸார் தள்ளுமுள்ளு

Clash in Tamilnadu congress press meet for Rahul visit announcement: ராகுல் காந்தியின் தமிழகம் வருகை குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். ராகுல் காந்தியின் இந்த ஒரு நாள் பயணம் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் சந்திப்பு இன்று சென்னை சத்யமூர்த்தி … Read more

உடல் ஆரோக்கியம் சார்ந்த சவால் போட்டிகள்! சுகாதார துறை அமைச்சர் முதலிடம்.!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அளவில் நடைபெற்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த சவால் போட்டிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதலிடம் பிடித்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிங்கார சென்னை 2.0 வீதி விழா என்ற நிகழ்வின் கீழ் … Read more

உடன்குடி விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது. ஏன்? – சீமான் பட்டியலிடும் காரணங்கள்

சென்னை: “தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்“ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது … Read more

“இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது”- உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கக்கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்தப் பகுதி வேளாண் நிலம் என்பதால் … Read more

கமல்ஹாசன் கட்சிக்கு பழ கருப்பையா ‘டாட்டா’: காங்கிரஸில் இணைவாரா?

Tamilnadu News Update : கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசகரான இருந்த மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையாக தற்போது அக்கட்சியில் இருந்துதான் விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அக்கட்சியில் இருந்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இனி அரசியல் வேண்டாம் மக்கள் பணி போதுமானது என்று … Read more

அந்தமானில் உள்ளாட்சித் தேர்தல்.. தமிழக பாஜக அண்ணாமலை பிரச்சாரம்.!

அந்தமானில் மார்ச் 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்தமான் சென்றுள்ளார். அந்தமானில் மார்ச் 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக … Read more

'கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்வு இல்லை' – ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி சாடல்

கோவை: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார்” என்று கட்சி நிர்வாகிகளிடையே அதிமுக கொறாடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், எஸ்.பி.வேலுமணி. தலைமையில் கோவை மாநகர், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.26) நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகளிடையே எஸ்.பி.வேலுமணி பேசியது: “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஒரு சிலர் திமுகவுக்கு செல்கின்றனர். … Read more