உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவர்களை மீட்க மத்திய அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

புதுச்சேரி: உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழலையை கருத்தில் கொண்டு அங்கு கல்வி கற்கும் புதுவை மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகமம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் புதுவை முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார் இது குறித்து புதுவை அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்

வாணியம்பாடியில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதி உயிரிழப்பு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மகாலட்சுமி (80) இவர், தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சோதனை ஓட்டத்திற்காக சென்ற ரயில் மூதாட்டி மகாலட்சுமி மீது மோதியது. இதில், மூதாட்டி மகாலட்சுமி தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து … Read more

தி.மு.க 43.59%, பா.ஜ.க 7.17%… மாநகராட்சிகளில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள் முழுப் பட்டியல்

Corporation wards party wise votes sharing percentage : தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டப்பட்டது. பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு மண்டலத்தை மொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது திமுக. இந்த தேர்தலில், மாநகராட்சி வார்டுகளில் அனைத்து கட்சிகளும் பெற்றிருக்கும் வாக்கு வங்கி என்ன? கடந்த தேர்தல் காலத்தில் … Read more

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம்  வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை  உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தனியார் பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். இது உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பால் சந்தையில் 45 விழுக்காட்டை … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் <!– 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறி… –>

10, +2 பொதுத்தேர்வு தேதி இன்று அறிவிப்பு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நேரடி தேர்வு முறையில் நடைபெறும் 10, 12ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை Source link

'44 வாக்குகளே கிடைத்ததால் விரக்தி' – திருப்பூரில் மநீம வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்தகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுவது: திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி (55). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுப்பாத்தாள் (50). மணி மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் நடந்த … Read more

வெறும் 44 வாக்குகள்: மன உளைச்சலால் மநீம வேட்பாளர் எடுத்த முடிவு

தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே பெற்றதால் விரக்தியடைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி (55). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36 வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார். இதனால் தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் 50 ஆயிரம் … Read more

நகராட்சிகளில் 3-வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் முழுப் பட்டியல்

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்திலும் திமுக மிகப் பெரிய அளவில் முன்னிலை  பெற்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜக கவனிக்கத்தக்க வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் … Read more