வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு: சிறுமி மீது நடத்தப்பட்ட தாக்குதல்

வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாடகைதாரர் மகளின் மண்டையை உடைத்த புகாரில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மாணிக்கம் நகரைச் சேர்ந்த ராஜசேகரன் சுமதி. தம்பதிகளுக்கு, 21 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகன், பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த, 16ம் தேதி, ராஜசேகரன் குடும்பத்தார் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் : தூதரகம் சொல்லும் ஆலோசனை என்ன?

Russia vs Ukraine War Update : ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில்,  உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு கிய்வில்உள்ள இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன்படி உக்ரைனில் தற்போது இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருவதால் மக்கள் நடமாட கடினமாக சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால்  விமான சைரன்கள் மற்றும் வெடிகுண்டு எச்சரிக்கைகளைக் கேட்பவர்கள் அருகிலுள்ள வெடிகுண்டு பாதுகாப்பு மையங்களை கண்டறிந்து அங்கு சென்று … Read more

கடைக்கு வந்த வாலிபர்கள் பட்டப்பகலில் செய்த காரியம்.! கதறி துடித்த பெண்மணி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு லதா எனும் மனைவி இருக்கின்றார்.  இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இத்தகைய நிலையில், லதாவின் கடைக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்து சிகரெட் இருக்கிறதா என்று கேட்டு இருக்கின்றனர்.  இதன் காரணமாக, சிகரெட்டை எடுக்க லதா திரும்பிய நேரத்தில் ஒரு வாலிபர் லதாவுடைய கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை … Read more

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் <!– குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை தீவிர சிகிச்சை அளித்து… –>

சேலத்தில், தனியார் மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக 40 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாறினர். கடந்த நவம்பர் மாதம், சாதனா என்ற பெண்மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளின் எடை 525 கிராம் மட்டுமே இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே மாதத்தில் 40 லட்சம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கட்சி வாரியாக வாக்கு சதவீதம் – முழு விவரம்

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் பிடித்தது. இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்திலும் திமுக மிகப் பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜக கவனிக்கத்தக்க வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், சிபிஐ, … Read more

சென்னை: பள்ளி மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு – போலீசார் விசாரணை

சென்னை: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, தேவநேசன் நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (39), இவரது, மனைவி கௌரி (35), இவர்களது 12 வயது மகள் ஜெனிபர் சேலையூரில் உள்ள, தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், ஜெனிபர் கடந்த இரண்டு நாட்களாக, வயிற்று வலியால் அவதிப்பட்டு, பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை … Read more

சீமான், கமல்ஹாசன் கட்சி வாக்குகளை பறித்தது யார்?

தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும், சென்னையில் கனிசமாக வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வாக்குகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் கைவிட்டுப் போனதற்கு திமுகவின் அரசியல் உத்தியே காரணம் என்று கூறுகின்றனர். தமிழகத்தில் 2010ம் ஆண்டு சீமான் தலைமையில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியும் 2018ம் ஆண்டு கமல்ஹாசன் தலைமையில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யமும் எம்.எல்ல்.ஏ, எம்.பி. பதவிகளைக்கூட வெற்றிகொள்ளவில்லை என்றாலும் தேர்தல்களில் கனிசமான வாக்குகளை … Read more

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! அதிமுக அறிவிப்பு.!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ஆம் தேதி தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் திமுகவின் கையாலாகாத் தனத்தையும், திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மக்களுக்கு தெளிவாக புரிகின்ற வகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக செய்திகளை தந்து கொண்டிருந்த கழக … Read more

கின்னஸ் சாதனை படைத்த சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர்.! <!– கின்னஸ் சாதனை படைத்த சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டிய … –>

நினைவாற்றல் திறனில் கின்னஸ் சாதனை படைத்த மாணவரையும், தலைவர்கள் கதபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார். சென்னையை சேர்ந்த மாணவன் வருண், ஒரு நிமிடத்தில் 42 புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர் பெயரை சொல்லி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். மாணவன் வருணையும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று, தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து பிரபலமான குழந்தைகளையும் … Read more

ஜெயக்குமார் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து பிப்.28-ல் தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: ”முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற திங்கட்கிழமை (பிப்.28) காலை 10.30 மணியளவில், தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆளும் திமுகவின் கையாளாகாத் தனத்தையும், ஆளும் திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொரு … Read more