காஞ்சிபுரத்தில், ரூ.50 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு.! <!– காஞ்சிபுரத்தில், ரூ.50 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு.! –>

காஞ்சிபுரம் சித்திஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்டது. இக்கோயிலுக்கு பின்புறம் உள்ள 61 ஆயிரம் சதுரடி நிலம் தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, மொத்தம் 3 கோடி ரூபாய் வாடகை செலுத்தப்படாமல் உள்ளதால் அந்நிலத்தை மீட்டு அங்குள்ள கட்டிடத்துக்கு சீல் வைக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் களம் இறங்கினர். இதையடுத்து அந்நிறுவனம் தாமாக முன்வந்து … Read more

சென்னைக்கு வந்தது 3.89 லட்சம் CORBEVAX தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை: மத்திய அரசின் சுகாதாரத் துறை 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான CORBEVAX தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. இன்று சென்னைக்கு வரப்பெற்ற 3 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (24-02-2022) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு … Read more

இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க – மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கடிதம்

உக்ரைனில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்க்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில்… மதுரையில் இருந்து உக்ரைன் சென்று படிக்கிற மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழ்நாடு அளவில் எனும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். அவர்களின் பெற்றோர்கள் பதட்டத்தோடு என்னை தொடர்பு கொண்டு வருகிறார்கள். உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுகிறது என்றும் குண்டு வெடிப்புகள் பல … Read more

Tamil News Today Live: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பேர் பலி; 10 பொதுமக்கள் உயிரிழப்பு

Go to Live Updates Tamil Nadu News Updates: கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வலிமை ரிலீஸ் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பட்டாசு வெடித்து. பைக் சாகசங்கள் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம். அதே சமயம், கோவையில் வலிமை திரைப்படம் வெளியான பூ … Read more

கோவில்பட்டி பட்டாசு ஆலையில் தீ விபத்து 4 பேர் பலி.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விரைவாக ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் தங்கவேல், கண்ணன், … Read more

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் சாலையோர பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு <!– இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் சாலையோர பள்ளத்… –>

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர், சாலையோர பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பன்னியாமலையை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது 22 வயது மகன் அர்ஜூனன், நேற்றிரவு நண்பர்களை சந்தித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, நத்தம் சாலையில் வேகமாக சென்ற போது, நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு விழுந்து உயிரிழந்தார். இதனை பின்னால் வந்த மற்றொரு வாகன ஓட்டி, பார்த்துவிட்டு கடந்து … Read more

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 45 கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்று ஒரு கட்டிடத்தில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் ஆகிய 3 ரசாயனங்களைக் கொண்டு, ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்காக குழாயில் … Read more

"தோற்றது போதும் தலைமையேற்க வா தாயே" – மதுரையில் சசிகலா ஆதரவு போஸ்டர்

தோற்றது போதும் எம்.ஜி.ஆர், அம்மா கட்டிகாத்த அதிமுகவிற்கு தலைமை ஏற்க வாருங்கள் என சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து அதிமுகவினரால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், பல இடங்களில் டெபாசிட்டை இழந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் முடிவுகள் அதிமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக அதிமுகவிற்கு தலைமை மாற்றம் தேவை எனவும், சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்க … Read more

உக்ரைனில் சிக்கிய தமிழர்கள் அரசின் உதவியை பெறுவது எப்படி?

Tamilnadu Govt release helpline number for Ukraine live Tamil people: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்கு தமிழக அரசு மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்களை அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் படையெடுப்பை ஆரம்பித்துள்ளது. முன்னதாக உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் ஆரம்பித்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேறும் படி இந்திய அரசுக் கேட்டுக்கொண்டது. மேலும் இந்தியர்கள் விரைவாக வெளியேற கூடுதல் விமானங்களை … Read more

அடுத்த குடியரசு தலைவர் இவர்தனா? ரகசிய ஆலோசனை., மறுப்பு., விருப்பம்.!

வருகின்ற ஜூலை மாதத்துடன் தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவி காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது ஒரு மாற்று அணியை உருவாக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் … Read more