பிரபல தமிழ் நடிகரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்போகும் ஆளும் கட்சி.! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

மாநிலங்களவை உறுப்பினராக, தெலுங்கானா மாநில சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்பு உள்ளதாக, அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. டிஆர்எஸ் கட்சியின் சார்பில் போட்டியிட மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளதால், அதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சந்திரசேகரராவ் வாய்ப்பு வழங்குவார் என்றும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், அவ்வபோது அரசியல் சம்பந்தமான வாதங்களையும் முன்வைத்து … Read more

அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு <!– அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்தில் … –>

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல்லை சேர்ந்த வைரமுத்து என்பவர் தனது நண்பருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூருக்கு சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில், பழனி புறநகர் சாலையில் சென்றபோது, தங்களுக்கு முன் சென்ற கார் ஒன்றை அவர்கள் முந்த முயன்றனர். அந்த சமயத்தில் வலதுபுறத்தில் அந்த கார் வளைந்ததை எதிர்பாராத வைரமுத்து, தனது இருசக்கர வாகனத்தை அதன் மீது … Read more

வீடு, வீடாக சென்று கேக் வழங்கி நன்றி தெரிவித்த தோல்வியடைந்த சுயேச்சை பெண் வேட்பாளர்

வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளர் தனது தோல்வியை கேக் வெட்டி கொண்டாடி, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று கேக் வழங்கி தனது நன்றியை தெரிவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளில் திமுக, அதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒவைசி கட்சி உள்ளிட்ட கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். ஒரு சில வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது உள்ளூர் … Read more

தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரி சைக்கிள் கண்டுப்பிடிப்பு: மதுரை மாணவருக்கு குவியும் பாராட்டு

தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரி சைக்கிளைக் கண்டுப்பிடித்துள்ள மதுரை மாணவர் தனுஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர் கோட்ட நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் குமார். இவருடைய தந்தை கட்டிட காண்டிராக்டர். மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் தனுஷ் குமார், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர். கடந்த ஆண்டில் சோலார் சக்தியின் மூலம் இயங்கும் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். இந்நிலையில், புதிய முயற்சியாக ரீ-சார்ஜபில் இ … Read more

உக்கிரமாக மோதும் செல்வமணி – பாக்யராஜ்: யார், யார் எந்த அணி?

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையில் புதுவசந்தம் அணியும் பாக்யராஜ் தலைமையில் இமயம் அணியும் உக்கிரமாக மோதுகிறார்கள். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. 2022 -2024ம் ஆண்டுகான இயக்குநர் சங்கத் தேர்தலில், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தலைமையில் புதுவசந்தம் அணியும் இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் இமயம் அணியும் உக்கியமாக மோதுகின்றனர். இதனால், இயக்குநர் சங்கத் தேர்தலில் யார் … Read more

#தமிழகம் || மசூதி கட்ட எதிர்ப்பு., இருதரப்புக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை.!

வேலூரில் இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்கு அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மசூதி கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் இறங்கினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. வேலூர் பிரதான பஜார் அருகே சர்க்கார் மண்டித் தெருவில் மசூதி கட்ட இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு அந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலை மசூதி கட்ட ஏற்பாடுகள் … Read more

தமிழகம் முழுவதும் பிப்.27-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்.27) 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலியோ சொட்டு மருந்து முகாம் 27.02.20220 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 47.36 லட்சம் … Read more

’மோடி, பைடன், ஜி ஜின்பிங்குடன் வேஷ்டி சட்டையில் அஜித்’ – மதுரையை கலக்கும் வலிமை போஸ்டர்!

பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா, லண்டன் பிரதமர்களுடன் வேஷ்டி சட்டையில் அஜித் நடந்து வரும் புகைப்படத்துடன், ‘ உலகநாடுகள் எதிர்ப்பார்க்கும் வலிமை’ என அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை. ரசிகர்களிடையே இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் மிகவும் அதிகமாக உள்ள நிலையில்,இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் … Read more

89 சதவீதம் ஆக்கிரமித்த திமுக கூட்டணி; காங்கிரஸ், வி.சி.க செம்ம ஹேப்பி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக பெருநகர சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிட்ட 165 வார்டுகளில் 153 வார்டுகளில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆளும் திமுக சுமார் 93% இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில், குறைந்தபட்சம் திமுகவைச் சேர்ந்த 7 வேட்பாளர்கள் 10,000 வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதே நேரத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 200 வார்டுகளில் போட்டியிட்டாலும் 15 வார்டுகளில் மட்டுமே … Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி.. தலை நசுங்கி பெண் பரிதாப பலி..!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் தலைநசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் , சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவர் தனது மனைவி இசக்கியம்மாள் மற்றும் மகள் சோபிகாவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் தென்காசிக்கு சென்றார். அப்போது தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே வரும் போது பின்னால் வந்த கனரக லாரி ஒன்று அவர்களது இரு சக்கர வாகன்ம் மீது மோதியது. இந்த விபத்தில் இசக்கியம்மாளின் தலை மீது லாரியின் … Read more