எதை அழுத்தினாலும் பாஜகவிற்கு விழும் ஓட்டுகள்: லக்கிம்பூர்கேரி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் குளறுபடி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர்கேரி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் குளறுபடி ஆனதால், எதை அழுத்தினாலும் பாஜகவிற்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. பின்னர், அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நான்காவது கட்ட தேர்தலில் லக்கிம்பூர்கேரியின் தொகுதி வாக்குச்சாவடியில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பாஜகவிற்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. இதைக் கண்டுபிடித்து சரிசெய்ததால் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பிப்ரவரி 10-இல் தொடங்கி உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதில், இன்று நான்காவது … Read more

இணையதளத்திலோ சுயேட்சை வெற்றி; சான்றிதழ் கொடுத்ததோ திமுக வேட்பாளருக்கு-நீடிக்கும் குழப்பம்!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி என குறிப்பிட்டு, திமுக வேட்பாளருக்கு வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மிக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களை திமுக பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, அ.வல்லாளபட்டி, பாலமேடு, பரவை உள்ளிட்ட 9 பேரூராட்சிகளில் பல்வேறு கட்சிகள் … Read more

அதிமுகவை காப்பாற்றிய சேலம்; பாஜகவுக்கு “நோ” சொன்ன தருமபுரி; கொங்கு மண்டலத்தில் வெற்றி கொடி நாட்டிய திமுக

DMK sweeps the western region of Tamil Nadu: 10 வருடங்களுக்கு பிறகு நடைபெற்று முடிந்தது உள்ளாட்சித் தேர்தல். 21 மாநகராட்சிகளும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் நகராட்சி அமைப்புகள் மற்றும் பேரூராட்சி அமைப்புகளிலும் தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்தியது திமுக. 1996ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசமான வகையில் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது கொங்கு மண்டலம். அங்கே திமுகவின் எத்தகைய வாக்குறுதிகளிலும் பெரிய அளவில் வாக்குகளாக மாறாமல் இருந்தது அக்கட்சியினருக்கு … Read more

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் – அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.!

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உலகில் அழிந்து வரும் உயிரனங்களில் ஒன்றான கடற்பசுவை பாதுகாக்கும் வகையில், மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசியின் அந்த அரசாணை உத்தரவுப்படி, மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் திட்டத்திற்காக 5 கோடியை நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், அதில் விரிவான திட்ட அறிக்கை, கள ஆய்வு நடத்த முதல் கட்டமாக … Read more

நடுரோட்டில் திடீரென தனியாகக் கழன்று ஓடிய தனியார் பள்ளிப் பேருந்தின் சக்கரங்கள்… வெளியான சிசிடிவி காட்சி! <!– நடுரோட்டில் திடீரென தனியாகக் கழன்று ஓடிய தனியார் பள்ளிப் … –>

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்தின் பின்பக்கச் சக்கரங்கள் நடுரோட்டில் திடீரென கழன்று ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விவேகம் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பள்ளிப் பேருந்து கடந்த திங்கட்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பொண்ணாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது நடுரோட்டில் திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும் கழன்று மூலைக்கு ஒன்றாக சிதறி ஓடின. ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. … Read more

ஜெயலலிதாவின் சபதத்தை ஏற்று, அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம்: ஓபிஎஸ், இபிஎஸ்

சென்னை: “ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்க, அவரது சபதத்தை நாமும் ஏற்போம். அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம்” என்று அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: “அன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு வணக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வும் சாதனைகளும் நம்மை எல்லா நேரங்களிலும் வழிநடத்தும் ஆற்றல் கொண்ட திசைமானி என்றால் அது … Read more

திமுக பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நாளில் திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை கள்ள ஓட்டு போட்டதாகக் கூறி தாக்கியதாக கைதுசெய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான 2-வது வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற … Read more

Tamil News Today Live: காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமமாகிவிடும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Go to Live Updates Tamil Nadu News Updates: பிரபல மலையாள நடிகை லலிதா(74) உடல்நலக் குறைவால் கோச்சியில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – திமுக கூட்டணி அமோக வெற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளிலும், 132 … Read more

#சற்றுமுன் || முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின்போது பல்வேறு இடங்களில் திமுக-வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதில் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை,  அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கியதாக சொல்லப்படுகிறது.   இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

திருநின்றவூர் நகராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி <!– திருநின்றவூர் நகராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பே… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருநின்றவூர் நகராட்சியின் வெவ்வேறு வார்டுகளில்  போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட 3 பேர் வெற்றி பெற்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில்  போட்டியிட்ட திமுக வேட்பாளர் தி.வை. ரவி 924 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரது மனைவி உஷாராணி 1வது வார்டில் போட்டியிட்ட நிலையில், அவர் 506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல, ரவியின் தம்பி சுரேஷ்குமாரும் 25வது வார்டில் … Read more