திமுக வேட்பாளர்களின் வெற்றி நிலவரம்..! <!– திமுக வேட்பாளர்களின் வெற்றி நிலவரம்..! –>

தமிழ்நாட்டில் சென்னை உட்பட மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது சென்னை, சேலம், உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது சென்னை, சேலம், உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி எண்ணிக்கையில் முன்னிலை சென்னை மாநகராட்சி  சென்னை மாநகராட்சியில் திமுக 16 இடங்களில் திமுக முன்னிலை சென்னை மாநகராட்சியின் 15ஆவது வார்டில் திமுக வேட்பாளர் நந்தினி சண்முகம் வெற்றி தாம்பரம் மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலை தாம்பரம் மாநகராட்சி வாக்கு … Read more

ஈரோடு மாநகராட்சியில் குலுக்கல் மூலம் தேர்வான அதிமுக வேட்பாளர் 

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 54-வது வார்டில் இரு வேட்பாளர்கள் சம அளவு வாக்கு பெற்ற நிலையில், குலுக்கல் மூலம் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி 54-வது வார்டில் மொத்தம் 3276 வாக்குகள் பதிவாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பாரதி 1037 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட செ. பானுலட்சுமி 1037 வாக்குகளும் பெற்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்ட க. சுதா … Read more

"கண்ணும் கருத்துமாக செயலாற்றுங்கள்"- திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், “உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், நமக்கு வெற்றி உறுதி. இதனால் நமக்கு கடமையும், பொறுப்பும் மிகுதியாகியுள்ளது. இருப்பினும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் குறைத்துக் கொண்டு, மக்கள் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பத்தாண்டுகளாகப் பாழாக்கப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேர்களுக்கு நீர் வார்த்து தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை … Read more

60 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கோட்டையை கைப்பற்றிய திமுக.!!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதுவரை திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் … Read more

ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளர் வெற்றி.! <!– ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளர் வெற்றி.! –>

ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளர் வெற்றி.! சத்தியமங்கலம் நகராட்சியில் 8ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் உமா, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி தலைவரைத் தீர்மானிக்கும் சுயேட்சைகள்.! தூத்துக்குடி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 6 இடங்களில் வெற்றி அதிமுக 4 இடங்களிலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் வெற்றி தோல்வியை அறிந்த வேட்பாளருக்கு நெஞ்சுவலி.! தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 3ஆவது வார்டு திமுக வேட்பாளர் திடீர் மயக்கம் வாக்கு எண்ணிக்கை முடிவில் தோல்வி … Read more

கோவில்பட்டி நகராட்சியில் 25 ஆண்டுகளுக்குப் பின் திமுக தனிப்பெரும்பான்மை: சில முக்கிய அம்சங்கள்

கோவில்பட்டி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவில்பட்டி நகராட்சியில் திமுக கூட்டணி 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கோவில்பட்டி நகராட்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 36 வார்டுகளுக்கு மொத்தம் 85 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இங்கு 12 மேஜைகள் அமைக்கப்பட்டு, 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் … Read more

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன், கடந்த மே மாத இறுதியில் ஒரு மாத பரோலில் வெளியே வந்திருந்ததார். இதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. அப்படி கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டிருந்த பரோல், இப்போது மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மே 28-க்குப் பின் 10-வது முறையாக நீட்டிக்கப்படும் பரோலாகும்.  ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், … Read more

நெல்லை பணகுடி: அதிமுகவை குலுக்கலில் வென்ற பாஜக வேட்பாளர்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 4ஆவது வார்டில் மொத்தம் 68. 03 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் அதிமுக வேட்பாளர் உஷா மற்றும் … Read more