திமுக நிர்வாகியை தாக்கியதாக வழக்கு: ஜெயக்குமார் கைது; சிறையில் அடைப்பு

நகர்ப்புறா உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக நிர்வாகியைத் தாக்கிதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அப்போது, சென்னை ராயபுரம் பகுதியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக ஒருவரை அதிமுகவின பிடித்து தாக்கத் தொடங்கினர். அங்கே இருந்த ஜெயக்குமார், பிடிபட்ட நபரை தாக்க வேண்டாம் என்றும் அவருடைய கைகளை கட்டும்படி கூறினார். பிறகு, அந்த நபரின் சட்டையைக் … Read more

உச்சகட்ட பரபரப்பில் அரசியல் கட்சியினர்.. இன்று வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகள்.!!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதற்காக மாநகராட்சி பகுதியில் 15,158 வாக்குச் சாவடிகளும், நகராட்சி பகுதியில் 7,417 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஒரு … Read more

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் – மாநில தேர்தல் ஆணயம் <!– உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும்… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு மேல் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன தேர்தல் நடத்தும் அலுவலர்களால், வாக்கும் மையங்களில் அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 23-ம் … Read more

திருவாரூர் மத்திய பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Thiruvarur Central University of Tamilnadu recruitment 2022 apply soon: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலர், உதவி பதிவாளர், பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 05 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மக்கள் தொடர்பு அலுவலர் (Public Relations Officer) காலியிடங்களின் … Read more

#BigBreaking || அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சற்று முன் கைது.! 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சற்று முன்பு தமிழக காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று, ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா தொற்று.! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா தொற்று.! –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து, 788 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 191 பேருக்கும், கோவையில் மேலும் 115 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 2 ஆயிரத்து 692 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில், 14 ஆயிரத்து 33 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். Source link

பிப்ரவரி 21: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,45,717 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

ஜெயக்குமார் வீட்டில் குவிந்த போலீஸார் – கைது நடவடிக்கையின் போது நடந்தது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்த போது அங்கு நடந்தது என்ன என்பது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. திமுக பிரமுகரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள 49-வது வார்டில், கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து அதிமுகவினர் தாக்கினர். அந்த சமயத்தில், அங்கு வந்த முன்னாள் … Read more

அன்புச்செழியன் மகள்- அமைச்சர் உறவினர் மகன் திருமணம்: குவிந்த கோலிவுட் சூப்பர் ஸ்டார்கள்

திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் மற்றும் திமுக அமைச்சர் உறவினரின் மகன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நகைச்சுவை நடிகர் சேந்தில், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திர நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். பிரபல சினிமா பைனான்ஸியர், வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் திருமணம் மகள் சுஷ்மிதாவுக்கும் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் மகனும் சன் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநருமான சரணுக்கும் இன்று திருவான்மியூரில் உள்ள (பிப்ரவரி 21) ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் … Read more