வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரத்தை தூண்டிவிட அதிமுக திட்டம் – செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

கோவை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரத்தை தூண்டிவிட, அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர் எனஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மின்சார, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சரும், கோவை மாவட்டப் பொறுப்பாளருமான அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “கோவையில் எதிர்கட்சியான அதிமுகவினர், வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க சில முயற்சிகளை செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வன்முறை, கலவரத்தை தூண்டிவிட அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக, கோவையில் … Read more

"வலுக்கட்டாயமாக என் கணவரை காவல்துறையினர் இழுத்துச் சென்றனர்" – ஜெயக்குமார் மனைவி பேட்டி

‘காவல்துறையினர் என் கணவரை என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி பேட்டியளித்துள்ளார். திமுக பிரமுகரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள 49ஆவது வார்டில், கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், நரேஷின் சட்டையை … Read more

பெருந்தன்மை காட்டிய ஸ்டாலின்; மகிழ்ச்சியில் திளைக்கும் புஷ்பவனம் குப்புசாமி குடும்பம்!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் … Read more

பட்ஜெட் தாக்கல், தமிழக அரசு ஆலோசனை.!

பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை தமிழக நிதித் துறை மேற்கொண்டுள்ளது. பட்ஜெட் தயார் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.  தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், … Read more

ஆசிரமத்தில் கல்லூரி மாணவி தற்கொலை.. சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுத பெற்றோர்.! <!– ஆசிரமத்தில் கல்லூரி மாணவி தற்கொலை.. சாமியார் மீது நடவடிக்… –>

திருவள்ளூர் அருகே ஆசிரமம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரிடம் கதறிய நிலையில், சம்மந்தப்பட்டவர் சாமியாரே அல்ல, அவர் வைத்தியர் என்று கூறி அவருக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் எஸ்.பி.அலுவலகத்தில் முறையிட்டனர். வெள்ளாத்துக்கோட்டையில் ஆசிரமம் நடத்தி வரும் முனுசாமி என்பவரிடம் நாகதோஷம் கழிப்பதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் விஷமருந்தி … Read more

திமுக தொண்டரை தாக்கிய வழக்கு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. அன்றைய தினம் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், … Read more

கச்சத்தீவு திருவிழா: தமிழக பக்தர்கள் 50 பேருக்கு இலங்கை அரசு அனுமதி

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் அலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவில் உள்ள பிரசித்தி பெற்ற அந்தோணியார் ஆலய திருவிழா வரும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனிடையே, பக்தர்கள் இன்றி இந்த திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த திருவிழாவில் பங்கேற்க இந்தியா, இலங்கயைச் சேர்ந்த 50 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.Source : … Read more

‘உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை’ அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தெரிவித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம்தேதி நடைபெற்றது. தேர்தல் எந்தவித தடையும் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடிந்ததாக திமுக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், கோவை, நெல்லை, திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து, புகார் … Read more

முறைகேடுகளில் இருந்து திசை திருப்பவே ஹிஜாப் பிரச்சனை! அண்ணாமலை குற்றச்சாட்டு.!

ஆளும் கட்சி சார்பில் நடத்தப்பட்ட முறைகேடுகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே மதுரை மேலூர் வாக்குச்சவடியில் ஹிஜாப் பிரச்சனை எழுப்பபட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மக்கள் மத்தியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது என்றார். இந்த தேர்தலில் பண பலமும், குண்டர்கள் மூலம் அட்டூழியம், … Read more